பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday 24 June 2016

மனத்துணிவை மெருகேற்றும் நந்தகுமார் ஐஆர்எஸ்... சி.குருநாதசுந்தரம்.

மனத்துணிவை மெருகேற்றும் நந்தகுமார் ஐஆர்எஸ்... சி.குருநாதசுந்தரம்.




     இன்று புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியப் பெருமக்களுக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் மனஊக்கப் பயிற்சி நடைபெற உள்ளது.

     தன் மாணாக்கரை ஒருவித படபடப்போடு அணுகும் ஆசிரியப் பெருமக்களின் மனச் சோர்வகற்ற புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. செ. சாந்தி அவர்கள் இப்பயிற்சியை வழி நடத்துகிறார்கள்.

     கற்றலில் பின்தங்கிய மாணாக்கரிடையே நம் நேசம் குன்றளவேனும் குறைந்து விடக் கூடாது என்பதை மையப்படுத்தும் இப்பயிற்சியில் தமிழக வருமான வரித்துறை இணை இயக்குநரும் சிறந்த ஆளுமைத் திறனும் தமிழக மாணாக்கருக்குச் சிறந்த முன்மாதிரிமனிதராகவும் தன்னம்பிக்கையூட்டியாகவும் விளங்கும் திரு. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்கள் பயிற்சி நல்லுரை வழங்கவுள்ளார்கள்.

    அவரைப் பற்றிய செய்திகளை படித்த போது ஒரு விவரிக்க இயலா பிரமிப்பு என்னுள் படர்ந்தது. அதனைப் பகிர்ந்தால் நம் பயிற்சி மேலும் செறிவுறும் எனத் தோன்றியது.

    அவருடைய ஒரு நாளிதழ் பேட்டி இது. படித்துப் பாருங்கள். நம் வகுப்பறையில் இனியும் மக்கு என முத்திரை குத்தப்பட்ட மாணாக்கர்கள் இனி நம் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து விடுவார்கள். அதுவும் நம் பணியில்  நற்கட்டமைப்புக்கு வழிகோலும் தானே !!

    இந்த உலகில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனித்தன்மை திறமை இருக்கும். அதை அவரவர் சரியான நேரத்தில் அடையாளம் கண்டுகொண்டால் போதும். என்னிடம் உள்ள தனித் தன்மையை என் பெற்றோரின் உதவியோடு நான் அடையாளம் கண்டுகொண்டேன். அது என்னவென்றால் GAINING PRACTICAL KNOWLEDGE IN ACTIVITIES. என் நண்பர்களும், உடன் பணிபுரிந்தவர்களும் கூட இதற்கு உதவினார்கள்.

    நான் வியாசர்பாடியில் உள்ள டாக்டர்.அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தான் என்னுடைய டிகிரி படிப்பை படித்தேன். முதலாம் ஆண்டு தேர்வுக்கு முன்பு எனக்கு அம்மை போட்டுவிட்டது. சுகாதார மற்றும் இதர காரணங்களுக்காக என்னை எக்ஸாம் எழுத அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால் எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். கல்லூரி பிரின்சிபால், மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குனர்களை சந்தித்து அவர்களை கன்வின்ஸ் செய்தேன். என்னுடைய மனவுறுதியை பார்த்து அவர்கள் என்னை தேர்வெழுத அனுமதித்தார்கள். ஆனால் தேர்வு எழுதும்போதே நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். என்னை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இரண்டு சப்ஜெக்ட்களில் பெயிலாகிவிட்டேன். கல்லூரி படிப்பில் என்னுடைய முதல் எக்ஸாமே தோல்வியில் தான் ஆரம்பித்தது.

    பல மரம் வெட்டும் தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்று சொல்வதைப் போல, நாம் அனைத்தையும் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் ஒன்றில் கூட கவனம் செலுத்துவதில்லை. பள்ளிப் படிப்பை நிறுத்த நேர்ந்ததற்கு நான் ஒரு வகையில் சந்தோஷமே படுகிறேன். காரணம், அதனால் தான் பல வேலைகளை கற்றுக்கொள்ள முடிந்தது. அவற்றில் எனக்கு அனுபவப் பூர்வமான KNOWLEDGE கிடைத்தது.

    உதாரணத்திற்கு நான் ரேடியோ மெக்கானிக்காக வேலை பார்த்தபோது, எலக்ட்ரானிக்ஸ் குறித்த அனுபவப் பூர்வமான அறிவு கிடைத்தது. டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்தபோது ஆட்டோமொபைல் பற்றிய அறிவு கிடைத்தது. சித்தாள் வேலை பார்த்தபோது சிவில் என்ஜினீயரிங் பற்றிய அறிவு கிடைத்தது. ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்தபோது பிரிண்டிங் பற்றி தெரிந்துகொண்டேன். இவை அனைத்தும் PRACTICAL KNOWLEDGE என்பது தான இங்கு விசேஷமே. வியாபாரம் பற்றியும் கஸ்டமர்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதையும் நான் லாட்டரி டிக்கெட் விற்றபோது கற்றுகொண்டேன். இவைகளை செய்யும்போது நான் மனமுவந்து சந்தோஷமாக செய்தேன். எந்தக் கட்டத்திலும் இந்த வேலைகளை செய்ய நேர்ந்ததற்கு நான் வருத்தப்பட்டதேயில்லை. என்ன இப்படி கேட்டுடீங்க…. நான் CIVIL SERVICES தேர்வுக்கு தயாரானபோது இந்த PRACTICAL KNOWLEDGE அனைத்தும் எனது THEORITICAL KNOWLEDGE க்கு பக்க பலமாக இருந்தது. தயாராவது சுலபமாக இருந்தது. நான் வெற்றி பெற இது தான் காரணம். மேலும் இந்த CIVIL SERVICES தேர்வு பற்றி எனக்கு தற்செயலாகத் தான் தெரிந்தது. கல்லூரியில் நண்பர்கள் கூறித் தான் தெரிந்துகொண்டேன்.
நான் மாநிலக் கல்லூரியில் POST GRADUATION படித்த போது, பல்லாவரம் ராணுவப் பயிற்சி மையத்தில் லெப்டினென்ட் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டேன். கல்லூரியில் நான் என்.சி.சி.யில் இருந்தது இந்த விஷயத்தில் எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எதிர்பாராத சாலை விபத்தில் நான் சிக்கொண்ட படியால், என்னால் அதில் சேரமுடியவில்லை.

இந்நிலையில், நாளிதழ் ஒன்றில் ஒரு பிரபல கல்வி நிறுவனம், UPSC தேர்வுக்கு தயாராவதற்கு நுழைவு தேர்வு ஒன்று வைக்கப்போவதாக அறிந்து அதற்க்கு அப்ளை செய்தேன். நான் அந்த நுழைவு தேர்வை வெற்றிகரமாக எழுதி, இண்டர்வ்யூவுக்கு சென்றேன். ஆனால் நான் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து மூன்றாம் வகுப்பில் (3RD CLASS) தான் பாஸ் செய்திருக்கிறேன் என்று கூறி என்னை நிராகரித்துவிட்டார்கள். என் ..எஸ். கனவு இத்துடன் முடிந்தது என்று நினைத்து நான் வருந்திய நேரம், ..எஸ். தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு என்றும் அதை மத்திய அரசு நடத்துகிறது என்றும் அந்த தேர்வுக்கு தயாராவதற்கு தான் என்னை நிராகரித்த மேற்படி நிறுவனம் பயிற்சியளிக்கிறது என்றும் புரிந்து கொண்டேன். என் நண்பன் ஒருவன் மூலம் இந்த விபரங்களை தெரிந்துகொண்டபின்னர் நான் ..எஸ். தேர்வுக்கு எனது பயிற்சியை துவக்கினேன்.



இந்த ..எஸ். எக்ஸாம் எழுதி பாஸ் பண்றதுக்கு முன்னாடி TNPSC EXAM எழுதி அதுல க்ரூப் 2 வேலை கிடைச்சது. சம்பளம் பேசிக் எல்லாம் சேர்த்து ரூ.7000/- இருக்கும், ஆனா, நான் அதை வேணாம்னு விட்டுட்டேன். ஏன்னா, 1986 லயே நான் ஒரு நாளைக்கு லாட்டரி வித்து ரூ.300/- சம்பாதிச்சவன். So, i wanted to achieve something big.

நான் லாட்டரி வேலை பார்த்தப்போவும் சரி, மெக்கானிக் வேலை பார்த்தப்போவும் சரி, ரேடியோ ரிப்பேர், சவுண்ட் சர்வீஸ் வேலை பார்த்தப்போவும் சரிஅந்த வேலைக்கான PRACTICAL KNOWLEDGE தான் எனக்குள்ளே போச்சே தவிர நெகடிவ்வான விஷயங்கள் எதுவும் எனக்குள்ளே போகலே. என்னுடைய வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.

நான் இந்த ..எஸ். பாஸ் பண்ணினப்போ எங்க கூட செலக்ட் ஆனவங்க எல்லாரும் ப்ரெஸிடென்ட் கூட ஒரு இண்டராக்ட் நடந்துச்சு. அப்போ என் கூட இருக்குறவங்க எல்லாம் அவங்களை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ, "நான் ..டி. படிச்சேன். நான் பிட்ஸ் பிலானில படிச்சேன். நான் ..எம். படிச்சேன்…." அப்படி இப்படின்னு அறிமுகப்படுத்திகிட்டு அவங்க காலரை தூக்கிவிட்டுக்குறாங்க. அந்த கூட்டத்துல Ph.D பண்ணவங்க மட்டுமே மொத்தம் 28 பேர் இருந்தாங்க. நான் என்னோட முறை வந்தப்போ, எழுந்து நின்னு, "நான் கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சவன் சார். 3rd கிளாஸ் GRADUATE" ன்னு நான் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தாங்க.


உடனே  ப்ரெஸிடென்ட் கேட்டார்… "YOU MEAN DR.AMBEDKAR LAW COLLEGE?" அப்படின்னு. நான் "இல்லே…  DR.AMBEDKAR GOVT. ARTS COLLEGE, VYASARPADI"ன்னு சொன்னேன். அவர் ஆச்சரியமா பார்த்தார்.

நான் எக்ஸ்ப்ளெயின் பண்ணேன். "..எஸ். எக்ஸாம் எழுதுறதுக்கு பெரிசா எந்த QUALIFICATIONS கிடையாது சார். ஏதாவது ஒரு கிராஜூவேஷன் இருந்தாபோதும். பாஸ் பண்றதுக்கு பெரிசா அவங்க EDUCATION BACKGROUND இருக்கா என்றெல்லாம் பாக்குறது கிடையாது. ..எஸ். எக்ஸாம் பாஸ் பண்றதுக்கு என்னை மாதிரி ஒரு ORDINARY PROFILE இருக்குறவங்களே போதும். பெரிய PROFILE அவங்களுக்கு இருக்கணும் என்றெல்லாம் அவசியம் இல்லே. அதுவும் இந்த எக்ஸாம்ல நான் ALL INDIA FIRST RANK வந்திருக்கேன்"னு சொன்னவுடனே ரொம்ப ஆச்சரியப்பட்டார் கலாம்.
"நான் கூட இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு பெரிய படிப்பாளியா இருக்கணும்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்" அப்படின்னார். நான், "இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு நாம படிப்பாளியா இருக்கணும்னு அவசியம் இல்லே சார். நம்முடைய அறிவை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துற பக்குவம் இருந்தாலே போதும். இந்த எக்ஸாமை ஈசியா பாஸ் பண்ணிடலாம்"னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.

இந்த எக்ஸாமை பாஸ் பண்றதுக்கு எல்லாரும் ஒரு மாயையை வெச்சிருக்காங்க. அந்த மாயையை உடைக்கணும் என்பது தான் என் ஆசை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சாதிக்கனும்னா ஒரு குறிப்பிட்ட சிலரால மட்டும்தான் முடியும் அப்படின்னு இன்றைய இளைஞர் சமுதாயம் நினைக்கிறாங்க. அது தப்பு. ஒரு விஷயத்தை செய்யனும்னு நினைச்சா செஞ்சிடலாம். அவ்வளவு தான். செய்றதுக்கு என்ன வேண்டும் என்று தான் யோசிக்கவேண்டுமே தவிர, அவனுக்கு மட்டும் கிடைத்துவிட்டதே என்று எவரும் ஆதங்கப்படக்கூடாது. ஏன்னா, கடவுள் நம்ம எல்லாருக்குமே தனித் திறமையை கொடுத்திருக்கிறார்.
அரசுத் துறைகளில் உயர்ந்த இடத்தில் அதிகாரியாக பணிபுரிய ஆர்வமும், துடிப்பும் அவசியம். நீங்கள் எந்த அரசுத் துறையில் பணிபுரிந்தாலும், விரிவான மேலாண்மையும், பணியாளர் நிர்வாகமும், அதிக பட்ச நிதி மேலாண்மையும், முக்கியமாக சூழ்நிலையை திறம்பட நிர்வகிக்கும் மேலாண்மையும் உங்களுக்கு அத்துபடியாகிவிடும்.

ஆனால் எடுத்த எடுப்பில் நான் .ஆர்.எஸ். அதிகாரியாக வந்து உட்கார்ந்து விடவில்லை. அதற்கு முன்பும், மாநில அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை ஊழியராக அதிகாரியாக பணியாற்றியிருக்கிறேன். உதவி அதிகாரி, பஞ்சாயத் இயக்குனர், கூட்டுறவுத் துறை சப்-ரெஜிஸ்ட்ரார் இப்படிப் பல. உண்மையில் நான் UPSC தேர்வில் .பி.எஸ். அதிகாரியாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், நான் தேர்ந்தெடுத்தது இந்த .ஆர்.எஸ். துறை. (INDIAN REVENUE SERVICE).
தகுதியுள்ள அனைவரையும் தங்கள் வருமானத்திற்கு சரியான வரிகளை கட்டவைப்பது. காரணம் வரிகளின் மூலம் தான் அரசாங்கங்கள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். என்பதை நான் என் பணியில் செயல் படுத்தி வருகிறேன்.

ஒரு முறை ஒரு பள்ளிக்கு சென்றபோது படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு மாணவன் என்னிடம் வந்து, என் கதையை கேட்ட பிறகு, தான் படிப்பை தொடர விரும்புவதாக கூறினான். கூடவே தன்னுடைய தனித் திறமையான செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தப்போவதாக கூறினான். பின்னர் அவன் மாவட்ட மாநில போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுவிட்டான். தற்போது தேசிய, சர்வேதேச போட்டிகளில் கலந்துகொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறான்.
இதே போல கும்மிடிபூண்டி அருகே மூன்று பள்ளி மாணவிகள், தாங்கள் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகவும், ஆனால் என் கதையை கேட்டபிறகு மூவரும் மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்றதாகவும், தற்போது +1 வகுப்பில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார்கள்.

10 ஆம் வகுப்பு மற்றும் +2 தேர்வெழுதும் சென்னை மாநகராட்சியின் 30,000 மாணவ மாணவியருக்கு  தன்னம்பிக்கை ஊட்டும் பொருட்டு தேர்வுக்கு முன்பு அவர்களிடம் உரையாற்றினேன். இதையடுத்து பொதுத்தேர்வில் முதன் முறையாக மாநகாராட்சி பள்ளிகள் வரலாறு காணாத அளவு சாதனைகளை நிகழ்த்தின என்று கூறுகிறார்கள். முதன்முறையாக மொத்த தமிழக சராசரி வெற்றி சதவீதத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகள் முந்தின.

தினமலர் நாளிதழ் பல ஊர்களில் நடத்திய "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினேன். இதைத் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் உயர்ந்ததால் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர்களும் எனக்கு நன்றி கூறினார்கள்.
இதைத் தவிர கல்லூரி மாணவர்கள் பயன்பெறும்  பொருட்டு ஒரு விசேஷ ப்ரோக்ராமை வடிவமைத்துள்ளேன். அதற்கு பெயர்  Entrepreneur Development Programme (EDP) அதாவது "தொழில் முனைவோர் முன்னேற்ற திட்டம்". இதன் குறிக்கோள் வாழ்க்கையில் உயர்ந்தவற்றை நினைத்து அந்த குறிக்கோளை அடைய முற்படுவதே.

என்னுடைய சகோதரி ராணி மற்றும் ராதா. அப்புறம் சகோதரர் சாக்ரடீஸ். இவர்கள் அனைவரும் நான் பள்ளிப் பருவ காலத்தில் படிப்பை நிறுத்திய போது எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய பாதையை செப்பநிட்டதில் பங்குண்டு.
நான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள்நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.

நான் படிப்பை நிறுத்தியதாலோ என்னவோ என்னை பின்பற்றி எனது தங்கைகளும், தம்பியும் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள்நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வந்து திரும்பவும் படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்க.

நான் மெக்கானிக் ஷெட்ல இருந்து ப்ரைவேட்டா படிக்க ஆரம்பிச்சப்போ எங்க ஏரியாவுல இருக்குற ஒருத்தரு கிட்டே அட்டஸ்டேஷன் வாங்க போவேன். அவர் ஒரு GAZETTED OFFICER. அவரோட பசங்க கொஞ்சம் அப்படி இப்படி rough & tough இருப்பாங்க. நம்மளை ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க. நான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் .ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன். அவர், "வாங்க சார்…. வாங்க சார்….எப்படி இருக்கீங்க…." அப்படின்னு கேட்டுட்டுஅவர் பசங்களை, "டேய் நந்தகுமார் சார் வந்திருக்கார்வாங்கடா" அப்படின்னு கூப்பிட்டார். என்னை வாடாபோடான்னு கூப்பிட்டுக்கிட்டுருந்தவர் திடீர்னு… "வாங்க சார்போங்க சார்"னு கூப்பிட்டது எனக்கு ரொம்ப ODD இருந்தது. "சார் நீங்க எப்பவும் போலவே என்னை வாடாபோடா"னு கூப்பிடுங்க. சார்னெல்லாம்  கூப்பிடாதீங்க. எனக்கு என்னவோ போலிருக்கு"ன்னேன்.
நான் அட்டஸ்டேஷன் வாங்கப் போறப்போ எல்லாம், அந்த ஆபீசர் என்ன பண்ணுவார்னா, அவரோட பைக்கை என்னை துடைக்க சொல்லுவார். நானும் மெக்கானிக் என்பதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் துடைத்துத் தருவேன். நான் .ஆர்.எஸ். ஆனபிறகு, ஒரு முறை எதேச்சையா அவரை பார்க்கப் போயிருந்தேன்.


"நீங்க வேறசும்மாயிருங்க சார். என் பசங்களோட ஃபியூச்சருக்கு நீங்க தான் சார் அவங்களை கைட் பண்ணனும்" அப்படின்னு சொல்லி, அவங்களுக்கு என்னை ..எஸ். கோச்சிங் கொடுக்கச் சொன்னார்.
நான் சிவில் சர்வீசஸ் (IAS) எக்சாம்ல பாஸ் பண்ணினதுக்கப்புறம், நான் இருந்த ஏரியாவுல, அங்கேயிருந்த ஒரு அசோசியேஷன் சார்பா எனக்கு பாராட்டு விழா ஏற்பாடாகியிருந்தது. அங்கே லோக்கல்ல இருக்குற கல்யாண மண்டபத்தை இதுக்காக புக் பண்ணியிருந்தாங்க. பங்க்ஷன் அன்னைக்கு மதியம் நான் அந்த மண்டபத்தை பார்க்க போயிருந்தேன். அந்த  பங்க்ஷனுக்காக அங்கே சவுண்ட் சர்வீஸ் பண்ணிகிட்டுருந்தது யார்னாநான் எந்த சவுண்ட சர்வீஸ்ல யார்கிட்டே வேலை பார்த்துகிட்டுருந்தேனோ அவர் தான். அவருக்கு நான் Post Graduation வரைக்கும் முடிச்சிட்டு I A S Exam பாஸ் பண்ணின விபரமோ அங்கே பாராட்டு விழா எனக்குத் தான் நடக்கப்போகுதுன்னோ தெரியாது.
அவரைப் பொருத்தவரைக்கும் நான் அவரோட  பழைய எடுபிடி தான். என்னை பார்த்தவுடனே கூப்பிட்டு, "கொஞ்சம் அந்த கம்பத்துல ஏறி இந்த ஸ்பீக்கரை கட்டு. அதுல எறி வயரை மாட்டு"ன்னு வேலை வாங்க ஆரம்பிச்சிட்டார். நானும் மறுப்பேதும் சொல்லாம அவர் சொன்ன வேலைகளை எல்லாம் செஞ்சேன். ஒரு மணி நேரத்துக்கும் மேலே, அங்கே இருந்து அவர் சவுண்ட் சிஸ்டம் செட் பண்றதுக்கு எல்லா ஹெல்ப்பும் செஞ்சிட்டு, "நான் போயிட்டு வர்றேண்ணே"ன்னு சொல்லிட்டு சைலண்ட்டா கிளம்பி வந்துட்டேன்.

சாயந்திரம், பங்க்ஷன் அட்டென்ட் பண்ண மண்டபத்துக்கு வந்தேன். என்னை பார்த்துட்டு, "இங்கே எங்கேடா வந்தே?"ன்னு கேட்டார். "சும்மா பார்க்கலாம்ன்னு வந்தேன் அண்ணே" னு சொன்னேன்.
பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகும்போது நான் மேடையில போய் உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்துல அவருக்கு புரிஞ்சிடிச்சு பாராட்டு விழாவே எனக்குத் தான்னு. அவருக்கு கையும் உடலே. காலும் உடலேதவிக்கிறார். பங்க்ஷன் முடிஞ்சப்புறம் என் கிட்டே வந்து "சாரிசார்உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……!!" அப்படின்னார் ரொம்ப சங்கடப்பட்டுகிட்டு.
"சாரிசார்உங்களுக்கு தான் இந்த பங்க்ஷன்றதே எனக்கு தெரியாது. உங்களை வாடா போடான்னு சொல்லி வேலை வாங்குனதுக்கு முதல்ல என்னை மன்னிச்சுடுங்க……!!"
"எப்பவும் போலவே என்னை வாடாபோடான்னே கூப்பிடுங்க. பரவாயில்லே. சார்னு மட்டும் கூப்பிடாதீங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று அவரிடம் சிரித்தபடி சொல்லிவிட்டு வந்தேன்.

நீங்க என்னவாக விரும்புறீங்க என்பது தான் முக்கியம். என்னவாக விரும்புறீங்கன்னு முடிவு செஞ்ச பிறகு, அதற்க்கான ஒரு துறையை தேர்ந்தெடுங்க. பின்னர் அதற்கான திறமையை உங்களிடம் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் சாதனைக்கான நேரத்தை நீங்களே தேர்ந்தேடுத்துக்கொள்ளுங்கள். WHAT YOU THINK YOU BECOME.

சி.குருநாதசுந்தரம் , புதுக்கோட்டை.
நன்றி : தினமலர் கல்வி மலர்.