புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளையின் சார்பாக வருகிற ஆசிரியர்
தின விழா அன்று எனக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
என்னால் இன்னும்
நம்ப முடியவில்லை.
ஒருவேளை இன்னும்
அதிக பொறுப்புடன் செயல்படவேண்டுமென்ற பயமா ?
அல்லது இன்னும்
என்னை அதிகளவு மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எச்சரிக்கையா ?
அல்லது என் அனுபவத்தை
இன்னும் கூர்மைப்படுத்த வேண்டுமென்ற அறிவுரையா ?
எதுவென்று புரியவில்லை.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை வாழ்த்த நீங்களும் வருவீர்கள்
தானே ?
வாழ்த்துகள் சார்..கட்டாயம் வருகின்றோம் வாழ்த்த.....உங்கள் ஆசிரியப்பணியில் இவ்விருது ஒரு மைல்கல்லாகட்டும்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமனதில் அச்சம் வேண்டாம் துணிவோடுசெல்லுங்கள்...
அங்கிகாரம் கிடைப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஅண்ணா! வாழ்த்துக்கள் !! உங்களுக்கு இது சரியான அங்கீகாரம் என்பதில் எங்களுக்கு ஒன்றும் ஐயம் இல்லை :))
ReplyDeleteதாமதமாகத்தான் வருகிறேன் நண்பரே.
ReplyDeleteவிருதுகளில் தங்களைப் போலவே எனக்கும் நம்பிக்கை இல்லைதான் (இருக்கிற சூழல் அப்படி) ஆனால், தகுதியறிந்து தரப்படும் (கவனிக்க வாங்கப்படும் அல்ல) விருதுகள் தருவோருக்கும் பெறுவோருக்கும் பெருமையெனில் வரவேற்போம். தங்களின் ஆசிரியப் பணியின் மேன்மை குறித்துப் புதுக்கோட்டை மாவட்டத் தமிழாசிரியர் அனைவரும், ஏன் பயிற்சிகளின்போது புதியன விரும்பிய ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தங்களின் பணியைப் பார்த்திருக்கிறோம். எனவே, சிவாஜிகணேசனுக்கு சிறந்த நடிகர் விருது தந்தது போல (?) தங்களுக்குத் தரப்படும் விருது கௌரவப்படுகிறது. தங்கள் பணிதொடரவும் விருது பெற்றமைக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் - அன்புடன் உங்கள் நண்பன், நா.முத்துநிலவன்.