பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday, 20 October 2014

தீபஒளித் திருநாள்.






எண்ணெய்க் குளியலுக்காய்
ஏங்கிய நாள் !


மனங்களிலும் இனிப்புப்பலகாரங்களிலும்
மகிழ்வின் மணம்


மத்தாப்பு ஒளிகளில்
அரும்புகளின்வாசம் மலரும்


உறவுகளின் வாழ்த்தொலியில்
உயிர்த்த உணர்வுகள்.


புத்தாடைக் குதூகலங்களில்
பெருகிட்ட விசாரிப்புகள்.


சமையலறைகளில் எண்ணேய்க்குளியலில்
வாழைக்காய்களும் வடைகளும்


இனிப்பை வெறுக்கும்
தாத்தாவின் நீரழிவுநோயும்
பாட்டியின் ஏக்கமும்


இதயத்தை இனிதாக்க
இளையதலைமுறையின்
தொலைக்காட்சிச் சிணுங்கல்களும்.


மகிழ்வை நிறைவாக்க
அம்மாவின் அதீத முயற்சிகளும்
அப்பாவின் கணக்குச்சிரிப்புகளுமாய்


வந்தது தீபஒளித்திருநாள் !


பட்டாசுசெய்த பிஞ்சுக்கரங்களுக்கும்
பட்டாடையுடுத்திய குண்டுக்கரங்களுக்கும்


மகிழ்வு ஒன்றுதான்.


இருந்தாலும்
வட்டிக்குவாங்கிய பணத்தைச்
செலுத்தவழி தேடும்
மழையைச்சபித்த
வறியவணிகரின் வறட்டுச்சிரிப்பு,


மனதை நெருடுகிறது !



அனைவருக்கும் தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.

11 comments:

  1. வட்டிக்குவாங்கிய பணத்தைச்
    செலுத்தவழி தேடும்
    மழையைச்சபித்த
    வறியவணிகரின் வறட்டுச்சிரிப்பு,-அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்களின் நூல்வெளியீட்டுவிழா சிறக்க வாழ்த்துகள்.

      Delete
  2. உளங் கனிந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள் தோழரே !

      Delete
  3. வணக்கம்
    வடித்த கவி கண்டு மகிழ்ந்தேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.

      Delete
  4. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துகள் தோழரே.

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Azhagana vaarthai pattasuhal...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா.

      Delete