பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday, 25 March 2016

வெப்பப்பொழுது !வெப்பப்பொழுது ! 

வசப்படாத பொழுதுகளை
வசப்படுத்தும் முனைப்பில்
வறண்ட பொழுதுகள் .ஆதவன் மிரட்டலில்
வெப்பத் தகிப்புகளில்
வறண்ட வாசங்கள்.


கண்மாய்ப் பொட்டலின்
வெடித்த பாளங்களில்
வேரூன்ற முயலும்
கருவேல வேராய்ப்
பயனற்ற பொழுதுகள்
.


கவிதையின் கருத்தேடிய
களைத்தலிலும்
களிமண் ஈரந்தேடிய
சலித்தலிலும்
வறண்ட பொழுதுகளின்
வசங்கள் நீளும் !நூலாம்படை படிந்த
பள்ளிக்கூடக் கதவுகளில்
சார்த்திவைக்கப்பட்டுள்ளன…
ஏர்கலப்பைகள் !கயிற்றுக்கட்டிலில் சுகமாய்ப்
படுத்துறங்குகின்றன..
சோம்பலும் உழைப்பும்.கிராமத்து ஆலமரங்களில்
கோடைக்காலமென்பது
வறண்ட பொழுதுகளாகவே
நகர்கின்றன.பொழுதுகளின் குளிர்தலுக்காய்
வரிசைகட்டி நிற்கின்றன..
மண்ணும் மனதும்.

6 comments:

 1. அய்யா வணக்கம்
  தகிப்புகள் தாங்கிய வரிகள். மனித மனங்கள் புரிந்து கொண்டு இயற்கைக்கு எதிரான நிலையைக் கை விட்டு விருட்சங்களை வளர்க்க முனைந்தால் விரைவில் காலம் மாறும் மண்ணும் மனமும் குளிரும். சமூக நோக்குடைய வரிகளுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. அய்யா வணக்கம்
  தகிப்புகள் தாங்கிய வரிகள். மனித மனங்கள் புரிந்து கொண்டு இயற்கைக்கு எதிரான நிலையைக் கை விட்டு விருட்சங்களை வளர்க்க முனைந்தால் விரைவில் காலம் மாறும் மண்ணும் மனமும் குளிரும். சமூக நோக்குடைய வரிகளுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. ஐயா,'கோடைத் தென்றலாய்' எனத் திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்!

  ReplyDelete
 5. காத்திருப்புகள்
  நலமாய் முடியட்டும்
  மனமும் மண்ணும் குளிரட்டும்

  ReplyDelete