சிறகுகள்
விரிக்கத்தெரியாத
சிக்கல்
மனம் !!
பட்டாம்பூச்சிகளைத்
தேடும்
பாசிபடர்ந்த
கண்கள் !!
மூளை
நரம்புகளின் 
கணக்குச்
சிக்கல்களில்
பிறழ்ந்த
விடை !!
கிழிந்த
சட்டைக்குள்
குட்டிச்சிறுவர்கள்
வீசிய
கற்துண்டுகள்
!!
இயல்பைத்
தொலைத்த
இயல்பான
கனவுகள் !
விடுதலைச்
சிரிப்புகள் !!
வேதனை
மறந்த
விசாரிப்புகள்
!!
குழந்தைக்
குறுகுறுப்பில்
பிணக்கு
மொழி !!
தெருவோரத்து
வெட்டப்பட்ட
மரத்தின் மீதோ,
சாலையோர
தார்த்தகிப்பிலோ..
வாசற்
கோலங்களின்
அழகை
விசாரிக்கும் போதோ
தெருநாய்கள்
குரைக்கும்
இருட்டு
சந்துகளுள்ளோ,
ஒரு
அழுக்கடைந்த
மனிதனை
நீங்கள்
சந்திக்கலாம்..
அன்புக்கரம்
நீட்டிப்
புன்னகை
உதடுகளால்
பொன்னுதவி
செய்யுங்கள் !!
மெல்லாதரவால்
அவர்களின்
மனநலம்
விசாரியுங்கள் !!
அவர்கள்
தாடி
முளைத்த  மழலைகள் !!
இன்று
உலக மனநலதினம் !! ( அக்டோபர் 10 )
                                    -----    சி.குருநாதசுந்தரம்.

 
 
தாடி முளைத்த மழலைகள் அருமை...
ReplyDelete:'( _/\_அன்னாரின் ஆத்மா ஷாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம் _/\_ :'(
ReplyDelete