பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 15 April 2012

மௌனம்
என் வகுப்பறையில்..
நான் மட்டும்..
பேசுகிறேன்,எழுதுகிறேன்.

வருகைப்பதிவேட்டின் வாசிப்பு
வணக்கங்களில் மட்டுமே
என் மாணவன் பேசுகிறான்.

என் வகுப்பறை
நீண்டு கிடக்கிறது.

கனவும்,கனத்த பார்வைகளும்,
வறுமை வியப்பும்,
வளைந்த வினாக்களும்,
என்
காலுக்கருகில், கழுத்து வலிக்க

கவனித்தும்,கேட்டும் 
உதடு பொத்தி அமர்ந்திருக்கையில்

நான் மட்டும்
பேசுகிறேன்.எழுதுகிறேன்.

வகுப்பறை அமைதி மட்டுமே
நல்ல கற்பித்தல் என்று
பாராட்டிசென்றார்கள்
அத்தனைபேரும்...!