பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 15 July 2014

எப்பொழுது வருவாய் கர்மவீரா !


அழுக்குச் சட்டையுடன்
ஆதரவின்றிப் படர்ந்த
என்
அறியாமைக் கைகளை
அன்புடன் பற்றி,
அழகுப் பள்ளிக்கு
அழைத்து வந்தாய் !

அகரம் படிக்கவைத்தாய்,
அறிவும் செழிக்கவைத்தாய்.

அழுத உதடுகளில்
அழகுப் புன்னகையைத்
தவழச் செய்தாய் !

பசித்த வயிற்றுக்குப்
பரிவாய் சோறிட்டாய் !

நீ
படிக்காததையெல்லாம்
என்னைப்
படிக்கச் சொன்னாய்.

தலைகவிழ்ந்திருந்த
என்
நிமிர்தலை
வீழ்த்தினாய் !

என் விரல்களில்
உண்மையை எழுதச் சொன்னாய்,
என் கரும்பலகையில்
மனிதநேயம் பதிவு செய்தாய்.

சாதனைகளை எட்டுவதற்காய்
உன்

சரித்திரத்தை எனதாக்கினாய்.

என்
சமூகம் காத்தாய் !

என்
நினைவுகளில் பூக்களைப்
பயிரிட்டாய் !

அம்மாவின் மடியில்
அழகுத் தமிழைப்
பேச வைத்தாய்.

பள்ளிச் சுவர்களிலெல்லாம்
அப்பாவின் கனவுகளை
எழுதச் செய்தாய்.
அதில்
என் இலக்குகளை
எழுத்தாக்கினாய் !

நீ
எப்போது வருவாயென
பள்ளி வாசலில்
தினமும் காத்திருக்கிறேன்.

உன்
கால்தடங்கள் மீண்டும்
என்
பள்ளித் தளங்களாக வேண்டும்.

என்
வாழ்வு மரத்தில்
நீ
இளைப்பாற
அறிவூஞ்சல்
அமைத்திருக்கிறேன் !

நீ நட்ட
விதை வளர்ந்து
விழுதுகளான கதை கேட்க
கர்மவீரா
எப்பொழுது வருவாய் ?

Tuesday 8 July 2014

குகனே குகன் - பகுதி - 3


                                         1966. ‘இருத்தி ஈண்டுஎன்னலோடும்
                                                            
இருந்திலன்; எல்லை நீத்த
                                                     அருந்தியன், ‘தேனும் மீனும்
                                                               
அமுதினுக்கு அமைவது ஆகத்
                                                      திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல்
                                                                   
திருஉளம்?’ என்ன, வீரன்
                                                     விருத்த மாதவரை நோக்கி முறுவலன்,
                                                                  
விளம்பலுற்றான்;

     ஈண்டு இருத்திஎன்னலோடும் - இங்கே அமர்வாயாக என்று

 இராமன் கூறியஅளவிலும்; இருந்திலன்- தன்னடக்கத்தால் இருந்தானில்லை; எல்லை

 நீத்தஅருத்திலன் - அளவு கடந்த அன்புடையனாய்; அழுதினுக்கு அமைவதாகத் தேனும்

 மீனும்திருத்தினென் கொணர்ந்தேன் - தேவரீருக்கு உணவாகப் பொருந்தும்படி தேனையும்,

  மீனையும்தூய்மை செய்து ஆராய்ந்து கொண்டு வந்துள்ளேன்திரு உளம் என்கொல்? என்ன -

 தங்கள்மனக்கருத்து  யாதோ?’ எனக் கூறி நிற்க வீரன் - இராமன்; விருத்த 

 மாதவரைநோக்க- வயது முதிர்ந்த முனிவர்களைப் பார்த்து முறுவலன்

 - இளஞ்சிரிப்புச் செய்தவனாய்; விளம்பல் உற்றான் - சொல்லத் தொடங்கினான்


அரிய, தாம் உவப்ப, உள்ளத்து
    
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்,
    
அமிழ்தினும் சீர்த்த அன்றே?
பரிவினின் தழீஇய என்னின்
     பவித்திரம்; எம்மனோர்க்கும்
உரியன; இனிதின் நாமும்
    
உண்டனெம் அன்றோ?’ என்றான்.
அரிய - அருமையான பொருள்கள்; தாம் உவப்ப - தாம்
மகிழ்ச்சியடைதற்குத் காரணமானவை; உள்ளத்து அன்பினால் அமைந்த
காதல் தெரிதரச்கொணர்ந்த - மனத்துள்ளே இருக்கின்ற அன்பின்
முதிர்ச்சியாகிய பக்தி அனைவர்க்கும்புவப்படுமாறு கொண்டு வரப்பட்டவை;
என்றால் - என்று ஆகுமானால் அமிழ்தினும்சீர்த்த அன்றே? -
தேவர் அழுதத்தைக் காட்டிலும் சிறப்புடையவை அல்லவா பரிவினில்
தழீஇய என்னின் பவித்திரம் - எப்பொருளும் அன்பினால் கொண்டு
வரப்பட்டவை என்றால்அவை தூய பொருள்களே; எம்மனோர்க்கும் -
எம்போன்ற தவம் மேற்கொண்டவர்களுக்கும்உரியன - ஏற்றுக்
கோடற்குரியனவே; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?’ -
இனிமையாக நாமும் உண்டதற்குச் சமானம் ஆகும் அன்றோ;’ என்றான்-.

1969. கார் குலாம் நிறத்தான் கூற,
                       காதலன் உணர்த்துவான், ‘இப்
     பார் குலாம் செல்வ! நின்னை,
                   இங்ஙனம் பார்த்த கண்ணை

                                       ஈர்கிலாக் கள்வனேன் யான்,
                                                                                        இன்னலின் இருக்கை நோக்கித்

                                      தீர்கிலேன்; ஆனது, ஐய!
                செய்குவென் அடிமைஎன்றான்.


 கார் குலாம் நிறத்தான் கூற - மேகம் போல் உள்ள கரு நிறம்
உடையதிருமேனியனாகிய இராமன் இவ்வாறு கூற காதலன்
உணர்த்துவான் - அவனிடத்தில் பேரன்புகொண்ட குகன் சொல்வான்;
இப் பார் குலாம் செல்வ! - இந்தப் பூமி முழுவதும் ஆளும்செல்வத்துக்
குரியவனே! நின்னை - உன்னை இங்ஙனம் பார்த்த கண்ணை -
இவ்வாறு  சடைமுடிக் கோலத்தோடு பார்த்த கண்களை ஈர்கிலாக்
கள்வனேன் யான் -இதுகாறும் பிடுங்கி எறியாமல் உன்பால்
அன்புடையவன் போல நடிக்கின்ற திருடன் யான்; இன்னலின் இருக்கை
நோக்கி - இத்தகைய துன்பத்தில் இருந்தபடியைப் பார்த்துதீர்க்கிலேன்-
உன்னைப் பிரிய மாட்டாதவனாக இருக்கிறேன் ஆனது - என்நிலைமை
அவ்வாறாகியது; ஐய! - ஐயனேஅடிமை செய்குவென்’ - (உன்
அருகேயேஇருந்து உனக்குரிய) தொண்டுகளைச் செய்வேன்என்றான்-.