ஒன்பதாம் வகுப்பில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழாசிரிய நண்பர்களுக்கு வளரறி மதிப்பீடு
செயல்பாடுகள் வடிவமைப்பதில் பல ஐயப்பாடுகள் ஏற்பட்டுள்ளதை அவர்களின் அலைபேசித் தொடர்பின்
மூலம் அறிந்தேன்..எனவே அதனைப் போக்கும் வாயிலாக என் வகுப்பறையில் செயல்படுத்தப்பட்ட
முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் சார்ந்த வளரறி மதிப்பீடு (அ) செயல்பாடுகளை இந்த இடுகையில்
பதிவு செய்துள்ளேன். பயன் பெற்று அதன் பின்னூட்டத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டத் தேர்தல் வரும் 25.08.2013 அன்று நடைபெற உள்ளது. சிறப்பாகச்
செயல்படும் தமிழாசிரியர்களைத் தேர்வு செய்து
நம் மாவட்டத்தில் சீரிய தமிழ்ப்பணியாற்றிட உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன் . நன்றி.
மற்றொரு இடுகையில் சந்திப்போம்.
அன்புடன்,
சி.குருநாதசுந்தரம்.