பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Tuesday 22 September 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு - மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்

உலகளாவிய மின்தமிழ்இலக்கியப் போட்டிகள்! - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை

தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம்

...இணைந்து நடத்தும்...

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! வகைக்கு மூன்று பரிசுகள்!

முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000

ஒவ்வொரு பரிசுடனும்

தமிழ்க்களஞ்சியம்இணையம் வழங்கும்

மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!

இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான

மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------


போட்டிகளுக்குரிய பொருள் (Subject) மட்டுமே தரப்படுகிறது
(அதற்குப் பொருத்தமான தலைப்பை எழுதுவோர் தரவேண்டும்) :

வகை-(1)கணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - 4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...

போட்டிக்கான விதிமுறைகள்

(1)
படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

(2)
இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டதுஎன்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.

(3) “
இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராதுஎன்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

(4)
வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். வலைபதிவரின் பெயரிலேயே படைப்புகள் வரவேண்டும்.

(5)
படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)

(6)11-10-2015
புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

(7)
உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com

(8)
தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9)
வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10)
மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.

அன்பான வேண்டுகோள் ஐந்து

(1)
போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.

(2)
விழாவில் வெளியிடவுள்ள தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.

(3)
அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!

(4)
எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள் - http://bloggersmeet2015.blogspot.com

(5)
உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம்

பாரதிக்கு ஒரு வேண்டல் :;


பாரதிக்கு ஒரு வேண்டல் 

வரம் -
வரம் - 2

                                                                   வரம் - 3Monday 21 September 2015

இணையத்தால் இணைவோம் !!!


வலைப்பதிவர் சந்திப்பு - புதுக்கோட்டை            வணக்கம். பணிப்பளு காரணமாய் இதுகாறும் பதிவுகளை இட 
இயலவில்லை. கடந்த மாதத்தின் ஒரு பிற்பகலில் என் மதிப்பிற்குரிய தமிழாசிரியர் கவிஞர் முத்துநிலவன் அவர்களிடமிருந்து அலைபேசி ஒலித்தது. எப்பொழுதும் அடிக்கடி அலைபேசியில் ஐயா கூப்பிட மாட்டார். நானும் அவ்வளவு அதிகமாக அவரிடம் பேச மாட்டேன். இயல்பாக என்னுள்ளே இருக்க்கின்ற நான் மாற்றிக்கொள்ள நினைக்கும் எனது அதிகம் பேசாக்குணம்  அவரிடம் மட்டுமல்ல, என் மதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவரிடத்தும் என் மீது ஒரு தலைக்கன மனப்பான்மையை ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையாகாது. ஆனால் ஐயா அவர்கள் என்னை அதிகம் ஊக்கப்படுத்தி பல்வேறு நிகழ்வுகளுக்கு என் தனித்திறன்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆதலால் அவரிடமிருந்து அலைபேசி வந்தால் ஒரு மிகப்பெரும் நிகழ்வுக்காக என்னை அழைக்கிறார் எனப் பொருள்..          அது மிகச் சரியாகவே இருந்தது. “ குருநாதன் , இந்த ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு நம்ம மாவட்டத்துல நட்த்தலாமா? அவர் என்னிடம் ஆலோசனை கேட்டார். என் ஆலோசனைகளை நான் கூற மாட்டேன் எனவும் அவருக்குத் தெரியும். சரி ஐயா, எனக் கூறிவிட்டு நான் அலைபேசியை வைத்து விட்டேன். கல்வித்துறை சார்ந்த பெரும் நிகழ்வுகள் என்னை அவர் பக்கம் போக இயலாத படி தடுத்தன. இருப்பினும் ஒவ்வொரு திட்டமிடலுக்கும் என்னை அவர் அழைக்கத் தவறியதில்லை. ஒருநாள் ஒரு திட்டமிடல் கூட்டத்திற்கு நான் சென்ற போது, வியந்தேன், அவ்வளவு பணிகளை அவர் முடித்திருந்தார். என்னிடம் அப்பொழுதும் ஆலோசனைகள் கேட்டார். எனக்கு என் இயலாமை மீது கோபமாக வந்த்து. என்னை அடிக்கடி கூர்தீட்டி, என்னை பல முக்கிய நிகழ்வுகளுக்கு ஆயத்தப்படுத்திய அவருக்கு எவ்வித உதவியும் செய்யவியலாத நிலையில் இருந்த எனக்கு முதன்முதலாக என்மீதே வெறுப்பு தோன்றியது. என் சகதோழர்கள் கஸ்தூரி, ஐயா மகாசுந்தர், கவிஞர் கீதா, விருதோம்பல் அரசியும் நான் அடிக்கடி வியந்து பார்க்கும் ஒரு முக்கிய நபருமாகிய தொடக்க்கல்வி அலுவலர் ஜெயா, போன்ற அனைவரும் அவருக்குப் பக்கபலமாய் இருந்த்து எனக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

    இருந்தாலும் இப்பதிவர் திருவிழா நடப்பதற்கு ஒரு சிறிய பங்களிப்பாவது நான் செய்ய வேண்டுமென என் மனது உறுத்தியதற்கிணங்க,  இன்று முதல் என் பணியை இப்பதிவு வாயிலாகத் தொடங்குகிறேன்.


      நிலவன் ஐயா அவர்களின் பணிக்கு முன்னால் நான் வெறும் எறும்பு எனினும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகளுள் சுறுசுறுப்பும் திட்டமிடலும் மிக முக்கியமான ஒன்று என்பதில் எள்ள்ளவும் ஐயமில்லை.

         மிகச்சிறப்பாக நடைபெறப் போகிற இத்திருவிழாவில் கணினி பயின்ற தமிழாசிரியப் பெருமக்கள் அகரத்தை அடுத்த தலைமுறைக்கு கணினி வழி நகர்த்தவிருக்கிறோம்..

        மிக முக்கிய ஆளுமைகள் இதில் கலந்து கொள்கிறார்கள். வலைப்பதிவுச் சித்தர் திண்டுக்கல் தனபாலன், வலைப்பதிவு வேந்தர் கரந்தையார், ஜம்புலிங்கனார், இளங்கோ எனப் பட்டியல் நீள்கிறது. அன்றொரு நாள் முனைவர். அருள்முருகன் ஐயா, நிலவன் ஐயா, திருப்பதி ஐயா, மகாசுந்தரய்யா போன்றோரால் வெங்கடேஸ்வரா தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கிய பயிற்சி விதை இன்று தான் தன் கிளைகளைப் பரப்பத் தொடங்கியிருக்கிறது. அதற்கு புதுக்கோட்டை தமிழாசிரியர் கழகத்தின் சிறு பங்கு போற்றுதற்குரியது.

       அக்டோபர் 11 ஆம் தேதி வாருங்கள். இது இணையத்தால் இணையக்கூடிய அரிய வாய்ப்பு மட்டுமல்ல, இளம் தலைமுறைக்கு நம் தமிழை அறிமுகப்படுத்தும் அற்புதமான திருவிழா . வலைப்பூவால் தமிழ்மாலை கோக்க புதுக்கோட்டை வலைப்பதிவர் சார்பாக பணிவோடு அழைக்கிறேன். தங்களின் வருகை எங்களுக்குப் பேருவகை. பதிவும் போட்டிகளில் கலந்து கொள்ளலும் மிகவும் முக்கியம், பெருநாழி பேருவகையோடு உங்களின் தடம் நோக்கிக் காத்திருக்கிறது.

    மறக்காமல் தங்களின் பொன்முடிப்புகளையும் கொடையாகத் தாருங்கள்.

தொடர்புக்கு : http://bloggersmeet2015.blogspot.com
அலைபேசி : 9443193293

நட்புடன்,
சி.குருநாதசுந்தரம்.
வலைபதிவர் சந்திப்பு விழாக்குழு. உறுப்பினர்.