பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 28 June 2014

இல்லறம். - வள்ளுவரின் வாழ்வறம்.
              உலகத்திலுள்ள அத்தனை உயிர்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு உயிருக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா ? யார் அந்த பெருமைக்குரியவர் ?

                           அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

                          தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது எதற்காகவென்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை
கேட்டதில்லை.

                         இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில்
 தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை
 இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாகக் கூறினார் ஐயன்..


                 வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சோறு சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.

                            பழைய சோறு எப்படிச் சுடும்? அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படிக்  கணவருடன் வாதம் செய்யாமல்விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் வாசுகி அம்மையாருக்கு உண்டு.

                                                அந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிற்றை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 

                                       “நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகுஎன்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
 

அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு.


என நான்கடியில் ஒரு பாட்டெழுதினார்.

                      அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

                           இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட,நீதிமன்ற வாயிலில் நிற்கும் இணையர், இந்நிகழ்வை மனதிற்குள் இருத்தல் அவசியமான ஒன்றன்றோ !


உசாத்துணை நூல்கள் : 1. வள்ளுவரின் அறம் - மு.வ.
                                         2. வள்ளுவனில் அறியப்படாதவை - குலோத்துங்கன்.
                                         3. வள்ளுவனின் இல்லறம் -  இறையன்பு.
 நன்றி :  மாவட்ட நூலகம், புதுக்கோட்டை.

Thursday 19 June 2014

வாருங்கள் தோழர்களே ! உதவுவோம். !

படித்ததில் பிடித்தவை !!!


1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை
  நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே 
  செஞ்சிலுவைச்சங்கத்தொலைபேசிஎண்ணான 9940217816 என்ற 
  எண்ணில் அழையுங்கள்அவர்ள்அக்குழந்தைகளின் கல்விக்கு 
  வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது இந்த
  இணையத்தில் தேடினால்கிடைக்கும் http://www.bharatbloodbank.com/
  பார்க்கவும்.

3.வீட்டுவிழாக்களில் மீதம் ஆகும் உணவை கீழே போடவேண்டாம்தயவு 

  செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில்அழைக்கவும் (இந்தியா மட்டும்). 
  இந்த எண் சிரமத்தில்சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் 
  எண் என்றுஅனைவரும் அறிந்ததேபசியால் வாடும் குழந்தைகளுக்கு 
  அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்


.4மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்விஇலவச விடுதிகுறித்து 
  தகவலைப் பெற* 9842062501, 9894067506       என்ற எண்களில்தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5. வாகனம் ஓட்டும் உரிமை அட்டைகுடும்ப அட்டைபாஸ்போர்ட்,வங்கிக்
    கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும்கீழே 
  கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில்இட்டுவிடுங்கள்
  அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும்.அதற்குரிய அஞ்சற்செலவுத் 
  தொகையை சம்பந்தப்பட்டநபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் 
  கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக10 
 பாகைகள் உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான
 வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து
 தெரிவிக்கின்றார்கள்நமது இமயமலையில் உள்ள பனிப்பாளங்கள்
 கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம்.ஆகையினால் 
 நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராடவேண்டிய 
 தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியேஅதனால் 
 நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் 
 பேணிக்காக்கலாம்


7.**நீரினையும்இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட)
  தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.நெகிழிப்    பொருள்களைப் பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்துநாசம்  செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்இப்போதிருக்கும்மனித இனம் 
 ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான உயிர் வளி 
 தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்என்று ஒரு 
 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇத்தனை சிரமம்இல்லாமல் நமக்காக 
 உயிர் வளி அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே.

8.கண் வங்கிகண் தானம் குறித்து தகவல்களை அறிந்து 
 கொள்ளசங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு
 எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்தேவைப்படும்சமயம் 
 நிச்சயமாக உதவும்.
 04428281919 மற்றும் 044282271616மேலதிக விபரங்களுக்கும் எப்படி
 கண் தானம் செய்வது குறித்ததகவல்கள் http://ruraleye.org/ இணையத்தில் 
 அறியலாம்.


9. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை
  வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட்
  பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது
  மேலும் விபரங்கள் பெற 9916737471


10. ரத்தப் புற்று நோய்:
      ImitinefMerciliet ( சொல்லின் எழுத்துகள் சரியா என்பதை          பார்த்துக்கொள்ளவும்)என்ற மருந்தின் மூலமாகஇரத்தப் புற்று 
 நோயைக் குணப்படுத்தலாம்இது அடையார்புற்றுநோய் ஆராய்ச்சி 
 மருத்துவமனையில் இலவசமாகக்கிடைக்கின்றதுபுற்றுநோய் முகவரி:
 East Canal Bank Road, Gandhi Nagar, Adyar, Chennai-20
  மிக்கேல் பள்ளிக்கு அருகில்
 தொலைபேசி இலக்கம்: 044 24910754, 04424911526, 04422350241

நன்றி : பயனுள்ள தகவல்கள்- காவ்யா பதிப்பகம்.
Tuesday 17 June 2014

நா நெகிழ் வாக்கியங்கள்


நா நெகிழ் வாக்கியங்கள் நமது தமிழ் உச்சரிப்பை சீர்படுத்தும். எனவே பின்வரும் வாக்கியங்களை வேகமாக படித்துப் பழகுங்கள்.


நமக்குத் தெரிந்த ஒரு ஒரு திருக்குறளே நா நெகிழ் வாக்கியமாக இருக்கிறது.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

உங்களுக்குத் தெரிந்தவை

பின் வருவனவை நீங்கள் கேள்விப்பட்டவைகளாகவோ அல்லது சிறு வயதில் படித்தவைகளாகவோ இருக்கலாம்.

1.இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.

2.கும்பகோணக் குளக்கரையில் குந்தியிருந்த குரங்கை குப்பன் குச்சியால் குத்தியதால்   குரங்கு குளத்தில் குதித்தது.

3.பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வைத்தியருக்கு   பைத்தியம் பிடிச்சா எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியத்துக்கு வைத்தியம்   பாக்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பாரு?

4.காக்கா காக்கான்னு கத்திறதினால காக்கான்னு பேரு வந்ததா?

 ‘
காக்கான்னு பேரு வந்ததினால காக்கா காக்கான்னு கத்துதா?

5.கிழட்டுக் கிழவன் வியாழக் கிழமை சடு குடு விளையாட குடு குடு வென ஓடி       வாழைப் பழ தோலில் வழுக்கி விழுந்தான்.

6.கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
  ஓடற நரியில ஒரு நரி கிழ நரி உருளுது புரளுது.

7.பச்சை நொச்சை கொச்சை பழி கிழி முழி நெட்டை குட்டை முட்டை ஆடு மாடு மூடு.

8. பச்சை குழந்தை வாழை பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
 ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை தனிக்கிளை தனில் வந்த கனிகளும்  இனிக்கல.

  
          எல்லாருக்கும் தெரிந்ததை கூறுவதில் என்ன பயன். எனவே நானே யோசித்து சில நா நெகிழ் வாக்கியங்களை எழுதியிருக்கிறேன். அவைகளையும் படித்துப் பழகுங்கள்.

9.தேவியும் கோபியும் கிளைகளில் தாவி, ஏறி இறங்கி, இறங்கி ஏறி, ஏறி இறங்கி விளையாடினார்கள்.

10.சொல்லவும் மெல்லவும் முடியாமல் அள்ளவும் மொள்ளவும் தெரியாமல் கொட்டவும் வெட்டவும் பிடிக்காமல் சட்டம் பேசின சிட்டைப் பார்த்து சிரித்த மொட்டையைக் காண மொட்டை மாடிக்குச் சென்றேன்.

11.கூட்டுக் களவாணிகள் கூட்டமாக கோட்டுப் போட்டு ஏட்டு வீட்டில் திறந்த பூட்டை பூட்டிப் பூட்டிப் பார்த்தார்கள்.

12.மெத்தையில் இருந்து விழுந்த அத்தை வாய்ப் பொக்கையாகி கை பைய்யும் பொத்தையாகி மெத்தையில் கிடந்த அத்தையை பார்க்க வந்தான் அத்தை மகன் சொத்தைப் பல் முத்தையன்.

13.பக்தியில் முத்தின பக்தன் பக்தர்களை பத்துப் பத்துப் பேராக பந்திக்கு அழைத்தான்.

14.சொல்ல சொல்ல சொல்லிக் கொள்ள எதுவும் இல்ல. சொல்லச் சொல்ல சொந்தங்களும் எதுவும் இல்ல.

15.வியாழக்கிழமை வாழப்பாடிக்கு வாழக் சென்றவன் வாழைப் பழத் தோல் வழுக்கி விழுந்தான்.

16.ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து குறை குடம் நிரப்பி நிறை குடம் ஆக்கினாள்.

17.சுத்தத்தை மறந்து சொந்தத்தைத் துறந்து பந்தத்திடம் இரந்து பணத்தைக் கரந்து பாதி வாழ்கையில் பரதேசியானான்.

18.ஒரு கை கொடுக்க மறு கை எடுக்க பிற கை மடக்க பலர் கை அடக்க வடக்கே போனான் கடுக்கன்.