பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 14 March 2015

காலத்தை வென்று நிற்கும் காரல்மார்க்ஸ் !                    "அந்த சாய்வு நாற்காலியிலேயே மார்க்ஸ்

1883ஆம் ஆண்டு மார்க்சு மாதம் 14ஆம் தேதி 

மரணம் அடைந்தார். 1883ஆம் ஆணடு மார்ச் 

17ஆம் தேதி ஹைகேட் கல்லறையில் மார்க்ஸ் 

புதைக்கப்பட்டார். அங்கே இறுதி அஞ்சலி 

நடைபெற்றது. பலரும் உரையாற்றினர்.

எங்கெல்ஸ் உரை நிகழ்த்தினார்:-

                 "மார்ச் 14ஆம் தேதியன்று பிற்பகல் 

இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே 

வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை 

நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் 

பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட 

ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த 

பொழுது அவர் தன்னுடைய சாய்வுநாற்காலியில் 

அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் 

கொண்டிருப்பதைக் கண்டோம்.
...
        அங்கக இயற்கையின் (organic nature) 

வளர்ச்சி விதியை டார்வின் கண்டு பிடித்ததைப் 

போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி 

விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார், மனிதன் 

அரசியல், அறிவியல், கலை, மதம், இதரவற்றில் 

ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண 

உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க 

உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் 

சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த 

மிகை வளர்ச்சியினால் மூடி 

மறைக்கப்பட்டிருந்தது, ஆகவே உடனடியான 

பொருளாதார வாழ்க்கைச் சாதனங்களைஉற்பத்தி 

செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட 

மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் 

போது அடைந்திருக்கின்ற பொருளாதார 

வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின்மீது 

சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் 

கருத்தாக்கம், கலை மற்றும் மதக் கருத்துக்கள் 

கூட வளர்ச்சியடைகின்றன, ஆகவே அதன் 

ஒளியில் அவற்றை விளக்க வேண்டுமே 

அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல 

மறுதலையாக விளக்கக் கூடாது.

        ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் 

இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை 

மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள 

முதலாளித்துவ சமூகத்தின் இயக்கத்தின் சிறப்பு 

விதியையும் கண்டுபிடித்தார். உபரி மதிப்பைக் 

கண்டுபிடித்தது திடீரென்று அந்தப்பிரச்சினையின் 

மீது ஒளியைப் பாய்ச்சியது, அப்பிரச்சினையைத் 

தீர்ப்பதற்கு முதலாளிவர்க்கப் 

பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகர்கள் 

ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த 

எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் 

கொண்டிருந்தன.

        ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு 

அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும்

அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய 

முடிந்தால்கூட அந்த மனிதர் அதிர்ஷ்டம் 

உடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய 

ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும்- அவர் 

பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில் 

கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை- 

கணிதத்தில் கூட சுயேச்சையான 

கண்டுபிடிப்புகளைச் செய்தார். அத்தகைய 

விஞ்ஞான மனிதர் அவர்.
...
.          ..
மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக 

வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட 

மனிதராக இருந்தார். எதேச்சாதிகார 

அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய 

இரண்டுமே அவரைத் தம்முடைய 

நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி 

வர்க்கத்தினர் மார்க்ஸ் மீது அவதூறுகளைக் 

குவிப்பதில் ஒருவருக்கொருவர்போட்டியிட்டனர். 

இவை அனைத்தையும அவர் ஒட்டடையைப் 

போல ஒதுக்கித் தள்ளினார். அவற்றைப் 

புறக்கணித்தார், இன்றியமையாத அவசியம் 

நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் 

பதிலளித்தார்.
...
       அவருக்குப் பல எதிரிகள் 

இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு 

தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் 

துணிந்து கூறுவேன்.
நன்றி : "மார்க்ஸ் - எங்கெல்ஸ் வாழ்வும் 

        படைப்பும்"  --- ஏ.கே.ஈசுவரன்.

Sunday 8 March 2015

உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினம்
மார்ச் 08, 2015:-

*************************************************


              உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.

                         1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்சில் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி தான் உலக மகளிர் தினம் அமைய ஒரு வித்தாக அமைந்தது. இதனையடுத்து, உலகெங்கும் பெண்கள் உரிமைக்காக போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடந்தது. பின்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.
பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்படுகிறது.


            ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.


Saturday 7 March 2015