பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday, 27 December 2013


                                   தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
                                புதுக்கோட்டை மாவட்டக் கிளை.
               

                                  தமிழ்ப் பயிற்சித் தேர்வுகள் -2014.

மதிப்பிற்குரியீர்,
                       
                   வணக்கம். தமிழாசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்கத்

தொடர்ந்து கல்வித் தளத்தில் இயங்கி வரும் நமது கழகம் மாணவர்களின்

நலனுக்காகவும் பல நற்பணிகளைச் செய்து வருவது தாங்கள் அறிந்ததே.

அதன்படி இவ்வாண்டு தமிழ்ப் பயிற்சித் தேர்வுகள் நடக்க உள்ளன. கடந்த

காலங்களில் தங்களின் முழு உதவியினால் மட்டுமே பயிற்சித் தேர்வுகள்

செம்மையாகவும்  மிக வெற்றிகரமாகவும் நடந்தேறியது. அதனைப் போலவே

இவ்வாண்டும் பயிற்சித் தேர்வுகளை நடத்தி  மாணவர்களின் கற்றல்

இலக்கான நன்மதிப்பெண்களையும் முழுத் தேர்ச்சியினையும் அடைவதற்கு

தலைமையாசிரியப் பெருமக்கள், தமிழாசிரியச் சான்றோர்கள், வட்டப்

பொறுப்பாளர்கள் , மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து உதவிட அன்புடன்

கேட்டுக்கொள்கிறோம். நன்றி.


                                                             முதல் தாள் :  06.01.2014

                                                        இரண்டாம் தாள்  : 07.01.2014  புலவர்.கு.ம.திருப்பதி,                                                           சி.குருநாதசுந்தரம்        
 மாவட்டத்தலைவர்                                                               மாவட்டச் செயலர்,


வி.சந்தான ஆரோக்கியநாதன்,                                       க.இளங்கோவடிவேல்,
மாவட்டப்பொருளர்,                                                        மாவட்ட இணைச்செயலர்,


முனைவர்.சு,துரைக்குமரன்,                                     முனைவர். இளங்கோவன்
தேர்வுச் செயலர் (புதுகை )                                  தேர்வுச் செயலர் ( அறந்தாங்கி)
                                             

5 comments:

 1. வணக்கம் ஐயா
  தேர்வு பற்றிய தகவல்களைத் தலைமையாசிரியர் மூலம் அறிந்தேன். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேர்வு சிறப்பாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்காக உழைத்த அனைத்து தமிழாசிரியர் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 2. தேர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  இந்த புத்தாண்டு சிறப்பாக அமையவும் நல்வாழ்த்துக்கள் பல...

  அன்புடன் DD

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete