அழுக்குச்
சட்டையுடன்
ஆதரவின்றிப்
படர்ந்த
என்
அறியாமைக்
கைகளை
அன்புடன்
பற்றி,
அழகுப்
பள்ளிக்கு
அழைத்து
வந்தாய் !
அகரம்
படிக்கவைத்தாய்,
அறிவும்
செழிக்கவைத்தாய்.
அழுத
உதடுகளில்
அழகுப்
புன்னகையைத்
தவழச்
செய்தாய் !
பசித்த
வயிற்றுக்குப்
பரிவாய்
சோறிட்டாய் !
நீ
படிக்காததையெல்லாம்
என்னைப்
படிக்கச்
சொன்னாய்.
தலைகவிழ்ந்திருந்த
என்
நிமிர்தலை
வீழ்த்தினாய் !
என்
விரல்களில்
உண்மையை
எழுதச் சொன்னாய்,
என்
கரும்பலகையில்
மனிதநேயம்
பதிவு செய்தாய்.
சாதனைகளை
எட்டுவதற்காய்
உன்
சரித்திரத்தை
எனதாக்கினாய்.
என்
சமூகம்
காத்தாய் !
என்
நினைவுகளில்
பூக்களைப்
பயிரிட்டாய் !
அம்மாவின்
மடியில்
அழகுத்
தமிழைப்
பேச
வைத்தாய்.
பள்ளிச்
சுவர்களிலெல்லாம்
அப்பாவின்
கனவுகளை
எழுதச்
செய்தாய்.
அதில்
என்
இலக்குகளை
எழுத்தாக்கினாய் !
நீ
எப்போது
வருவாயென
பள்ளி
வாசலில்
தினமும்
காத்திருக்கிறேன்.
உன்
கால்தடங்கள்
மீண்டும்
என்
பள்ளித்
தளங்களாக வேண்டும்.
என்
வாழ்வு
மரத்தில்
நீ
இளைப்பாற
அறிவூஞ்சல்
அமைத்திருக்கிறேன் !
நீ
நட்ட
விதை
வளர்ந்து
விழுதுகளான
கதை கேட்க
கர்மவீரா !
எப்பொழுது வருவாய் ?
வணக்கம்
ReplyDeleteஏழைகளின் தோழனின் பிறந்த தினத்தில் வடித்த கவிதை
இதயத்தை நெகிழவைத்த கவிதை கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்குநன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஐயா !
Deleteகவி கண்டு நெகிழ்ந்தேன்
ReplyDeleteநன்றி நண்பரே
ஆதங்கத்துடன்... சிறப்பான வரிகள்...
ReplyDeleteவிதை வளர்ந்து விழுதானதே போதுமன்றோ அந்தக் கர்மவீரருக்கு? எந்த உலகிலிருந்தாலும் அவர் பார்த்து வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்! வாழ்க பெருந்தலைவர் புகழ்!
ReplyDelete