துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர் -
அடியன், அல செறிந்தன்ன நிறத்தினான்,
நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்
இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான்.
(குகன் ) துடியன் - துடி என்னும் பறை உடையவன்; நாயினன் -
வேட்டைநாய்களை உடையவன்; தோற் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் - தோலாற் செய்த மிதியடிஇறுக்கிய பெரிய பாதங்களை
உடையவன்; அல் செற்நிதன்ன நிறத்தினான் - இருள்நெருங்கித்
திரண்டால் ஒத்த கருநிறம் உடையவன்; நெடிய தானை நெருங்கலின் -
தன்னுடையமிகப்பெரிய சேனை நெருங்கி்
வருதலின்; நீர் முகில் -
பெய்யும் மேகம்; இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் -
இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற
தன்மைகொண்டவன்.
1961.சிறுங்கிபேரம் எனத் திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்,
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்,-
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்.
சிருங்கி
பேரம் என - சிருங்கி பேரம் எனப் பெயர் பெற்று; திரைக்
கங்கையின் - அலை வீசும் கங்கை யாற்றின்; மருங்கு தோன்றும் நகர்-
பக்கத்தில் தோன்றுகின்ற
நகரிலே; உறை வாழ்க்கையன் - தங்கி வாழ்கின்ற
வாழ்க்கையை உடையவன் ஆகிய அவன்; இருந்த வள்ளலை - (முனிவர்
தவச்சாலையில்)தங்கியிருந்த இராமபிரானை; காண - காண்பதற்கு;
ஒருங்கு தேனொடு
மீன்உபகாரத்தன்- ஒரு சேரத் தேனும் மீனும் என்ற
கையுறைப் பொருளை ஏந்தியவனாய்; வந்துஎய்தினான்-வந்து சேர்ந்தான்
1963.கூவாமுன்னம்,
இளையோன் குறுகி,
‘நீ
ஆவான் யார்?’
என,
அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா!
நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன்,
நாய் அடியேன்’
என்றான்.
கூவா முன்னம் - குகன் அழைப்பதற்கு முன்னமே; இளையோன்
குறுகி - இலக்குவன் அவனைச் சென்றடைந்து; ‘நீ ஆவான் யார்’ என -
நீ யார்? என்று வினாவ; அன்பின் இறைஞ்சினான் - அன்போடு
குகன்
அந்த இலக்குவனை வணங்கினான்;
(முன் அறியாதவன் ஆதலின்
அவனையே இராமனாகக் கருதி) ‘தேவா! - அரசனாகிய தெய்வமே!; நாய்
அடியேன் - நாய் போலக் கீழான அடிமையாகிய; நாவாய் வேட்டுவன் -
கங்கையைக்கடக்க ஓடங்களை
உடைய வேட்டுவச் சாதியினனாகிய
குகனாவேன்; நின் கழல்சேவிக்க வந்தனன்- உனது திருவடிகளை
வணங்கும் பொருட்டு வந்தேன்;’ என்றான்
நாளை மீண்டும் அடுத்த பாடல்களோடு இணைகிறேன்.
நன்றி : கம்பராமாயணம்- சென்னைப்பல்கலைக்கழகப் பதிப்பு. -
|
ஆகா அருமையான பாடம் குகனே குகன்..
ReplyDeleteஇன்னும் ஆவலுடன் ஐயா..
மிக்க நன்றி தம்பி. தொடர்ந்து தொடர்பிலிருங்கள்.
Deleteபாடல்களும், உரையும் அருமை. நன்றி.
ReplyDeletewww.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in
மிக்க நன்றி ஐயா !
Delete