பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday, 26 January 2015

விளம்பரங்கள் விற்பனைக்கல்ல !


விளம்பரங்கள் விற்பனைக்கல்ல !கனவுத் தோழமையில்

இயல்பைத் தொலைத்த

இயல்பின் மீறல் !உணர்வுப் பாதையில்

எறும்பின் சுறுசுறுப்பாய்

புறஅழகு மயக்கங்கள் !காய்ந்துபோன சருகுகளாய்

அகஅழகு பறக்கின்றது,

மரணித்த மனக்காற்றில்.ஓடுகள் சுவையென்று

வீசப்படும் பழங்களில்

நேயவிதைகள்

மண்ணின் மனம்பிடிக்கக்

காத்திருக்கின்றன.உறுப்புகளின் வடிவங்களுக்கு

உள்ளப் புத்தகத்தில்

பரப்பளவு காணும்

உணர்வெழுத்துகளில்

அறிவுக்கண்கள் மரத்துப்போயின.இருந்தாலும்

பட்டொளி வீசிப்

பறந்திடும் தேசியக்கொடியைப்

பார்த்து வணங்கிடும்

பளபளத்த குட்டிக்கண்களில்,வீசப்பட்ட பழங்களின்

நேயவிதைகளுக்கான

உயிர்ப்பின் நன்னீர்

பளபளக்கிறது..மனிதத்திற்கு மரணமில்லை!

பள்ளிச்சுவர்களில் விளம்பரங்கள்

எழுதாதிருக்கும் வரை.


2 comments:

 1. வணக்கம்
  அற்புதமான படைப்பு.. பகிர்வுக்கு நன்றி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete