பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday, 25 January 2016

மதிப்பெண்களல்ல வாழ்க்கை - சி.குருநாதசுந்தரம்.மனம் மகிழ்வாயிருக்கட்டும்

மாணவர்களே !!வாழ்வுச் செடியில்..

மதிப்பெண்பூக்கள் மணப்பதில்லை..

இயல்பு மனம்

என்றும்போல்  இயல்பாயிருக்கட்டும்..வழமை போல்

புத்தகப்பக்கங்களுக்குள்  ஒளித்துவைத்திருந்த

மயிலிறகைத்  தேடுங்கள் !!வகுப்பறைக்  கலகலப்புகளின்

மீள்நினைவில்

மனம்விட்டுச்  சிரியுங்கள் !!சன்னலோரத்து  ஒற்றைப்பூவிடம்

கவிதை  சொல்லுங்கள் !!ஆசிரியர்களின்   மேசையில்

நன்றிப்புன்னகையைப்  பரப்பிவையுங்கள் ,அப்பாவின் கோபமும்

அம்மாவின் படபடப்பும்

அடுத்த நாள் மறைந்துவிடும்,மறைந்த பொழுதுகளில்

மனம்மகிழச் சொல்லுங்கள்


மதிப்பெண்களல்லவாழ்க்கை !!!

3 comments:

 1. வணக்கம்
  அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்

   Delete
 2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete