பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday, 9 January 2013


கடந்த இரு நாள்களாக தமிழாசிரியர் பயிற்சி முகாம் சார்ந்த பணியின் காரணமாக இடுகையிட முடியவில்லை. இப்பயிற்சி முகாமில் எனது இரு கவிதைகள் வாசிக்கப்பட்டன. அவற்றை இடுகையிட்டுள்ளேன்.இக்கவிதைக்கு ஈற்றடி  வழங்கிய தோழர் முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு நன்றி.
வள்ளுவம் வாழ்க்கை வழி.

வள்ளுவத்தின் ஈரடி, வாழ்நிலத்தின் நேரடி,

வள்ளுவத்தின் பாவடி, வெற்றிநேர்ப் பூவடி,

வள்ளுவத்தின் நாவடி, நற்சொல்லின் தாயடி,

வள்ளுவம் வாழ்க்கை வழி.

வன்கொடுமை தீர்க்கலாம் வா.

பெண்கொடுமை கண்டு நமக்கென்ன வம்பென்று

கண்மூடிச் செல்வாரே கண்ணிலார் – பெண்கொடுமை

தன்கொடுமை யென்றெண்ணும் தக்காரைக் கூட்டிங்கு

வன்கொடுமை தீர்க்கலாம் வா.

1 comment:

  1. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்புட்டு பெருமை கொள்கிறோம் ,நன்றி .நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் ..............
    http://blogintamil.blogspot.com/2013/01/2521.html

    ReplyDelete