எனது நண்பர் புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பதின்மப் பள்ளியில் பணிபுரிகிறார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் மாணவர்களுக்கு அமைத்துக் கொடுத்த கவியரங்கம்.
பள்ளிக்குப்
பெயர் வைப்போம் !
குறுங் கவிஞர்களின் குறும் கவியரங்கம்.
ஆன்றோர் அவைக்கு வணக்கம் !
என் பள்ளிக்கு எப்படிப் பெயர் வைத்திருப்பார்கள்
என்று
என் குறுமூளை குறுகுறுத்ததன் விளைவே
இக் குறுங் கவியரங்கம் !
வாருங்கள் கவிச்சரம் தொடுக்கக் காத்திருக்கும்
வருங்கால வைரமுத்துக்களை வரவேற்போம் !
கவியரங்கம்
தொடங்குகிறது ,..
வாருங்கள்
பள்ளிக்குப்
பெயர் வைப்போம் !
இருநூற்றுப்
பதினாறில்
இவ்வெழுத்திற்குப்
பெருமையுண்டு !
அவ்வெழுத்து
கவிதை சொல்கிறது கேளுங்கள் !
வணக்கம்
!
நான்
“ ம “.
முதலில்
நிற்கிறேன் !
முதன்மைப்
பள்ளியின்
பொன்னெழுத்துப்
பெயரின்
முதன்மை
எழுத்தாய்
முன்
நிற்கும்
வரம்
தந்த வேர்களை வணங்குகிறேன் !
நான்
“ ம “
உன்னதப்
பள்ளிக்குப் பெயர் வைக்க
இரண்டாம்
எழுத்து தேடுகையில்
இயல்பாய்
முன் வந்தது இவ்வெழுத்து !
இனி
கவிதையைக் கேளுங்களேன் !
நான்
“ வு “
உண்மைக்
கல்வி தரும்
வுயர்
பள்ளிக்கு
எழுத்தானதில்
எனக்கு
எல்லையற்ற
மகிழ்ச்சி!
இமயத்தில் எங்கிருந்தாலும்
உயர்வு
தானே
!
ஆம்
!
இரண்டாவதாய்
நின்றாலும்
நான்
இமயம் தான் !
நான்
“ வு “
நீளழகு
எழுத்தொன்று
நாவழகுக்
கவிதை சொல்ல
நடந்து
வருகிறது
!
வாருங்கள்
கவிதையை வரவேற்போம் !
நான்
“ ண் “
மூன்றாவதாய்
நிற்பவன்
!
முழுநிலவாய்
அழகொளிரும்
முத்துப்பள்ளிக்கு
முகப்பில்
தோன்றுவதால்
நான்
நீளழகு எழுத்து தான் !
நான்
‘ண் “
எளிமையழுகு
எழுத்தொன்று
எழில்
கவிதை படிக்க
ஆவலாய்
வருகிறது
!
கவிதையை
வரவேற்போம் !
நான்
“ ட் “
சிலுவைக்
குறியின் சிறுபாகமாய்
இருந்ததாலோ
இச் சிறியனை
இனிமைப்
பள்ளிக்கு
தேர்ந்தெடுத்திருப்பார்கள்
!
இறைவனுக்கு
நன்றி
!
நான்
“ ட் “
வண்மையழகொளிர
வரும்
எழுத்து
…
நம்
சிறப்பெழுத்துக்
கவிதையை
செவிமடுப்போம் வாருங்கள் !
நான்
“
சீ “
நாணத்தின்
நளினம்
எனக்குண்டு
!
ஆனாலும்
நாணலின் வளைவும்
எனக்குண்டு
!
சீருயர்ந்த
பள்ளியின்
சாதனைப்
பெயரிலே
எனக்கும்
சிற்றிடம்
கொடுத்தது..
இச்சிறியேனுக்குப்
பேறு
!
நான்
“ சீ “
நமக்கடித்தது
யோகம்
!
ஆம்
.
இடையழகொளிரும்
இன்னிசை
எழுத்தினை
பெற்றதனால்
…
நம்
பள்ளி யோகம் தான் !
நான்
“ யோ “
யோகம்
எனக்குத் தான் .
வையகத்
தலைமை கொண்ட
வானளாவிய
பள்ளிக்கு
என்
உடம்பை இணைத்தமைக்காய்
யோகம்
எனக்குத்தான் !
நான்
“ யோ “
முற்றுப்புள்ளிக்கு
முன்னால்
முற்றத்தின்
அழகியல்பாய்
ஈற்றெழுத்து
வருகிறது
இறுதியாய்
தன்னைச் சொல்ல !
நான்
“ ன் “
தமிழெழுத்தின்
கடைசி..
தகைமை
சால்
தொன்பள்ளிக்கும்
கடைசி..
இறைவனை
வழிபடும் போது
முன்
நிற்கும் சுண்டு விரலாய்..
மனமகிழ்ந்து
நிற்கின்றேன் ..
என்றென்றும்
நிலைத்து நிற்கும்
பெரும்
பேறு தந்திட்ட
பெரியோரை
வணங்குகிறேன் !
நான்
“ ன் “
ஏழெழுத்து
வந்தன..
ஏற்ற
கருத்து தந்தன..
ஏற்றமிகு
பள்ளிக்கு
ஏற்ற
எழுத்து என்றன..
ஆம்
..
என்றும்
உயர்ந்து நிற்கட்டும்
எம்
பள்ளி
..
நாங்கள்
..
மவுண்ட்
சீயோன் .
No comments:
Post a Comment