காலை வணக்கங்களினூடே
வரவழைக்கப்பட்ட
குறுஞ்சிரிப்பு !
செயல்களின்
வேர்களில்
சாயல்
மறந்து போன
சிறுசிறு
வேர்முண்டுகள் !
வழக்கமான
நிகழ்வுகளிலோ
வற்றிப்போன
தன்முனைப்பு !
பின்பற்றுவதை
பாதையாக்கிவிட்ட
நிகழ்வுகளின்
பெருந்தடங்கள் !
சுயம்
களவாடப்பட்ட
சிறைக்
கடமைகள் !
சிதைந்துபோன
அல்லது
சிதைக்கப்பட்ட
நிழலின்
உண்மைப்புள்ளிகள் !
இயல்பின்
ஆனந்தம்நோக்கி
இதயம்
காத்திருக்கிறது !
ஒருமுறையாவது
தடங்கள்
இயல்பின்
சாயலை
போர்த்திக்கொள்ளும்
போதுதான்
சுயத்தின்
முகம்
விரிந்து
மலர்ந்து
உயரஉயரப்
பறக்கும்.!
அதுவரை
..
தன்இயல்பின்
காத்திருத்தல்..
தொடர்ந்து
நீளும் !
மனம்பேசும்
பின்கால
மகிழ்வுணர்வுகளுக்காய்..
ஒருநாள்
நீளல்
குறுகும்,
ஏனெனில்
காலத்தின்
செலவழிக்கப்படாத
என்நொடிகளில்
என் தன்வயப்படுத்தல்
தொடங்கிவிட்டது
!
வணக்கம் ஐயா
ReplyDeleteஅழகான வரிகள். சுயம் சூழலின் காரணமாக இலகுவாக மறைந்து கொள்ளும் தன்மை கொண்டதாய் மாறி வருவதைத் தேடி வரவழைக்கும் தங்கள் கவிவரிகளின் சிந்தனைகள் அழகு. பகிர்வுக்கு நன்றி ஐயா..
என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒரு மிக நல்ல கவிதை
ReplyDeleteஉங்கள் தமிழ் கண்டு வெரன்டு ஓடிய எனக்கு இது ஒரு சற்றும் எதிர்பாரா இனிய ஆச்சர்யம் வாழ்த்துக்கள் குருஜி