பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 26 October 2014

பொருளாதாரம் சார்ந்து நான் படித்த இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய அறிக்கை :


               இங்கிலாந்து வாழ் மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் மேலும் ஒரு சுமை தூக்கி வைக்கப்பட உள்ளது. ஆம் ஐரோப்பிய ஒன்றியம், 1.7 பில்லியன்(1700 மில்லியன்) பவுன்டுகளை ஒன்றியத்திற்கு செலுத்துமாறு இங்கிலாந்தைக் கோரியுள்ளது. இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் முற்றும் முழுதாக இணையவில்லை. இருப்பினும் ஒரு ஐரோப்பிய நாடு என்ற வகையில் அதில் அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில், பல ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளன.. இதேவேளையில் பிரான்சு நாடும் மிகவும் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து 1.7 பில்லியன் பவுன்டைக் கட்டவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

                        இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவ்வொரு நபர் தலையிலும் சுமார் 56 பவுன்டுகள் கட்டுமாறு றிவிக்கப்பபடவுள்ளது. அப்படிக் கட்டினால் தான் ஐரோப்பிய ஒன்றீயம் கேட்ட தொகையைசக்  கட்ட முடியும். இதேவேளையில் தாம் பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறி பிரான்சு, ஜேர்மனி, டென்மார்க், போலந்து போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்கின்றன. மேலும் இந்த நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட சில கடன்களையும் ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்கிறது. நாம் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து இருக்கவேண்டுமா என்ற முடிவை எட்டும் அளவுக்கு எங்களைத் தள்ளவேண்டாம் என்ற தமது கோபத்தை இங்கிலாந்து பிரதமர் திரு.கமரூன் தெரிவித்துள்ளார்.

                        மக்கள் தலையில் இவ்வளவு தொகையைத் திணிக்கத் தம்மால் முடியாது என்று கமரூன் நேற்று நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அடுத்த வருடம் பொதுத் தேர்தல் வேறு வரவுள்ளது.

                       ந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கோரிக்கையை ஏற்பதா இல்லையா என்று பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார் டேவிட் கமரூன். ஏற்கனவே பல போலந்து நாட்டவர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமாக வந்துள்ளார்கள்.

                      அவர்களில் பலர் அரச சலுகைகளை நன்றாக அனுபவிக்கிறார்கள். அதிலும் சிலர் , சிறுவர்களுக்கான சலுகைகளைப் பெற்றுக்கொண்டு தமது பிள்ளைகளை போலந்து நாட்டில் வைத்துப் படிப்பிக்கிறார்கள். ஆனால் லண்டனில் பிள்ளைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருப்பதால், இங்கிலாந்திற்கு எந்த நன்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

          ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ நிலையைத் தக்க வைத்துக்கொள்ள கமரூன் உதவ முன்வரக்கூடாது என்பதே எனது கருத்து.

No comments:

Post a Comment