தோழமையான
தந்தைத்துவம்
சுகம்.
வரம்புகள்
மீறீய
அப்பாவின்
அன்பு
வரம்.
சிகரம்
தொடச் சொன்ன
சிரமும்
கைபிடித்து
வாழ்வுசொன்ன
கரமும்.
என்
வாழ்வை
வேர்பிடிக்க
வைத்தன.
அவர்
உழைத்த
நிலம்
நான்.
மீசைகுத்திய
அன்பு
வலியில்
சிலிர்க்கும்
என் முகம்.
பனிக்கூழை
ஊதிக் கொடுத்த
.பாசத்தில்
பரவசம்
என்னுள் பரவும்.
அகர அறத்தால்
என்
உலகம்
உணர்த்திய
உன்னதம்.
துணிவின்
ஆழம்சொன்ன
என்
தன்னம்பிக்கை
உரம்.
அப்பாவின்
கண்ணசைவுகள்
ஆனந்த
வளம்.
நன்றிகள்
சொல்லும்
அப்பாவின்
தினத்தில்
.
நீளட்டும்
அப்பாக்களின்
சினேகம்.
வாழட்டும்
அப்பாவின்
அகம்.
வணங்குவோம்
தந்தைமை
மனம்.
பனிக்கூழை ஊதிக் கொடுத்த
ReplyDelete.பாசத்தில்/// அருமையான வரிகள் அய்யா ... http://ethilumpudhumai.blogspot.in/
மிக்க நன்றி தம்பி.
Deleteதந்தையர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Deleteஅப்பாக்களின் சினேகம் அருமை! என் தளத்தின் தொடரும் வலைப்பட்டியலில் இணைத்திருக்கிறேன். தொடருங்கள், தொடர்வோம்.
ReplyDeleteநன்றி ஐயா. தங்களின் மேலான ஊட்டம் எனக்குப் பெரிய பலம். மிக்க நன்றி.
Delete