வெண்மணி தியாகிகள்
நினைவு தினம்
கீழ்வெண்மணிப் படுகொலைகள்:
கீழ்வெண்மணிப் படுகொலைகள் என்பது 25
டிசம்பர் 1968இல் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் 20 பெண்கள்,
19 குழந்தைகள் உட்பட 44 தலித் வேளாண் கூலித் தொழிலாளர் படுகொலை நிகழ்வாகும்.
தஞ்சை என்றதும்
நமக்கு ராஜ ராஜ சோழனும், விவசாயமும், சிற்பங்களும், தான் நம் நினைவிற்கு வரும் ஆனால் அதையும் தாண்டி சாதிய கட்டமைப்பின் பிடியில் சிக்குண்ட இயல்பில்லாத இருப்பிடம் என்பது கீழ்வெண்மணி நமக்கும் நினைவு படுத்திகொண்டே இருக்கிறது.
தஞ்சையில் நிலச்சுவாந்தார்கள் தாழ்த்தபட்ட மக்களை பண்ணையாள்
( அடிமை ) முறை கட்டமைப்பிலே பல நூறு ஆண்டுகளாக வைத்திருந்தார்கள்… அவர்களின் குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது, வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகள், இரத்தம் வரும் அளவிற்கு சாட்டையால் அடிப்பதும் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து குடிக்கும்படி கட்டாயப்படுத்துவதும் மறுத்தால் அடிப்பதும். இத்தனை வலி அனுபவித்தும்
1968-வரை ஒரு படி நெல்லே கூலியாக வழ்ங்கப்பட்டு வந்தது.
கம்யூனிஸ்ட் மணியம்மையும், சீனிவாசர் அவர்களும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் விவசாய தொழிலாளர்களை ஒன்றிணைத்து உழைப்புக்கு ஏற்ற கூலி ( இப்போது வாங்கும் ஒரு படி நெல்லுடன் மேலும் ஒரு படி நெல் என்பது மட்டுமே அவர்கள் கேட்ட கூலி உயர்வு) வேண்டும் என்ற கோரிக்கையை 1967 ல் முதல் முதலாக முன்வைத்தனர்.
இத்தனை நாட்கள் நம்மிடம் கூலி வேலை பார்த்த அடிமைகள் கூலி அதிகமாக கேட்பதை அவர்கள் ஏற்கவில்லை…, இங்கு கூலி அதிகமாக கேட்பது என்பது பிரச்சனை இல்லை கூலியாட்கள் எப்படி அதைக் கேட்கலாம் அவர்களுக்கு எப்படி இதைக் கேட்கும் துணிவு வந்தது என்பதே பிரச்சனை….
,
இதனால் வெகுண்ட நிலச்சுவாந்தார்கள் விவசாய சங்கம் இருப்பதால் தானே இந்த கூலியாட்கள் இத்தனை கேள்வி கேட்கிறார்கள் என்று நினைத்தனர் . எனவே சங்கத்தில் இருந்தவர்களை தாக்குவது , அவர்களுக்கு வேலை கொடுக்காமல் வெளியில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைப்பதுமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நிலச்சுவாந்தார்கள் உருவாக்கி கொண்டே இருந்தனர்.
இதனால் வெகுண்ட நிலச்சுவாந்தார்கள் விவசாய சங்கம் இருப்பதால் தானே இந்த கூலியாட்கள் இத்தனை கேள்வி கேட்கிறார்கள் என்று நினைத்தனர் . எனவே சங்கத்தில் இருந்தவர்களை தாக்குவது , அவர்களுக்கு வேலை கொடுக்காமல் வெளியில் இருந்து கூலிக்கு ஆட்களை வரவழைப்பதுமாக தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நிலச்சுவாந்தார்கள் உருவாக்கி கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் 25.12.1968 அன்று மாலை வெண்மணி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, கணபதி என்ற இரண்டு விவசாயிகளை சவரிராஜ் நாயுடு என்னும் நிலச்சுவாந்தார் வீட்டில் கட்டி வைத்து அடித்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்வி பட்ட கிராமத்து விவசாய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களைk காப்பாற்றி மீட்டனர்.
இதனை அறிந்த மற்ற நிலச்சுவாந்தார்கள் மற்றும் கோபால கிருஷ்ண நாயுடு, துப்பாக்கி ஏந்திய காவல்துறை, அடியாட்கள் என அனைவரும் ஒன்றினைந்து வெண்மணி கிராமத்தில் நுழைந்து கண்ணில் தென்பட்ட அனைத்து மக்களையும் சுட ஆரம்பித்தனர் இதனால் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தொழிலாளர்கள் திருப்பித் தாக்கியதில் பக்கிரி சாமி என்பவர் கொல்லப்பட்டார்..,துப்பாக்கி சூட்டையும், போலீஸ் மற்றும் அடியாட்களின் வெறியாட்டத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிகொள்வதற்காக தப்பித்து ஓட ஆரம்பித்தனர்.அப்போது கலவரம் நடந்த அந்த தெருவில் கடைசியாக இருந்த ” ராமையா ” என்பவரின் குடிசைக்குள் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என மொத்தம் 48 பேர் குடிசைக்குள் புகுந்தனர்.
ஆத்திரம் அடைந்த வெறியர்கள் அந்த குடிசையினை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை யிட்டார்கள் குடிசைக்கு தீ வைக்கப்பட்டது.., உள்ளே இருந்த குழ்ந்தைகள் முதியவர்கள் என அனைவரும் கதறினர்.. எப்படியாவது தப்பிக்கலாம் என்று வெளியே ஓடி வந்த ஆறு பேரில் இரண்டு பேர் வெளியே குடிசை எரிவதில் இருந்து யாரும் தப்பிக்க கூடாது என்று காவலுக்கு நின்ற அடியாட்களிடம் சிக்கி மீண்டும் எரியும் குடிசைக்குள் தூக்கி எறியப்பட்டனர்.
உள்ளே நெருப்பில் வெந்து கொண்டிருந்த ஒரு தாய் தனது குழந்தையாவது காப்பாற்றபட வேண்டும் என்று தனது ஒரு வயது குழந்தையை வெளியே தூக்கி போட்டாள்.., வெளியே நின்ற அடியாட்களுக்கு அது குழ்ந்தையாக தெரியவில்லை அந்த ஒற்றை வயது சிறு குழ்ந்தையும் மீண்டும் எரிந்து கொண்டிருக்கும் குடிசைக்குள் தூக்கி எறியப்பட்டது. அந்த தீ வெகு நேரம் எரிந்து கொண்டே இருந்தது 1947 இந்தியாவிற்கு சுகந்திரம் கிடைத்து விட்டது என்ற அப்பட்டமான பொய் 1967 டிசம்பர் 25 கீழ்வெண்மணியில் 44 தலித்துகள் எரித்து கொல்லப்படும் அந்த தீயில் கருகி சாம்பலாக காற்றில் பரவி க் கொண்டிருந்தது.
சம்பவம் இரவு 8 மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு போலிஸார் இரவு 12 மணிக்கே மிக விரைவாக வந்து விட்டனர். மறுநாள் காலை 10 மணிக்கே , எரிந்து சாம்பலாகி போயிருந்த அந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது.
மொத்தம் 44
உயிர்கள் அல்லது 44 சடலத்தின் சாம்பல் எந்த அடையாளமும் கண்டுபிடிக்க முடியாதபடி சாம்பலாக கிடந்தது. அதில் ஒரு தாய் தன் குழ்ந்தை கருகி விட கூடாது என்று இறுகி அணைத்தபடி கருகி பிணமாக கிடந்தாள். இன்னொரு குழ்ந்தை தன் தாயின் முலையில் வாய் வைத்தடியே இறந்து கிடந்த காட்சியை எந்த ஒரு காரணத்தாலும் நியாயப்படுத்தவே முடியாது.
நன்றி தோழர்..
ReplyDeleteநல்ல பதிவு...
பல உணர்வுகளை எழுப்பிய பதிவு...
கொடுமை
ReplyDeleteமனிதம் மரித்த நாள்
வணக்கம்
ReplyDeleteஅறியாத நிகழ்வை அறிதந்தமைக்கு நன்றி
எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தோழருக்கு நன்றி. கீழவெண்மணி தியாகிகள் நினவுதின அஞ்சலியில் நானும் என் மௌன வணக்கத்தைச் செலுத்துகிறேன். இந்த கொலைகள் நடந்தபோது, அப்போது அங்கு இருந்த, தலித் தோழர் ஒருவர் இதுபற்றி என்னிடம் பின்னாளில் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
ReplyDelete