கைதி எண்
4958
மதுரை மத்திய சிறைச் சாலையில் பல
ஆண்டுகள் அனைவருக்கும் பழக்கப்பட்ட
எண்
தான் கைதி எண்
4958. பல உண்ணாநிலை அறப்
போராட்டங்களையும், கைதிகளின்
உரிமைக்காகவும் சமரசமற்றுப் போராடிய
எண் தான் இது.
உரிமைக்காகவும் சமரசமற்றுப் போராடிய
எண் தான் இது.
கம்யூனிஸ்டுத் தலைவன் தியாகி பாலுவைத்
தூக்கில் ஏற்றஅழைத்துச் சென்ற போது, பக்கத்து
அறையினின்றும் தோழர் பாலுவின் புகழ் வாழ்க,
கம்யூனிசத்தை
யாராலும் தோற்கடிக்க முடியாது
என்று குரல் கொடுத்த எண் தான் இது.
அன்றைய மதுரை சிறையில் கைதி எண்
4958 என்ற அறியபட்ட நமது தலைவர் தோழர்.
இரா .நல்லகண்ணு அவர்களுக்குஇன்று
91 வது
அகவை நன்னாள் அரசியல்வாதிகள் என்றாலே
ஒரு வெறுப்புணர்வுடன் பார்க்கப்படும் தமிழகத்தில்
தனது எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும்
நேசிக்கப்படும் மூத்த தலைவர்
மரணத்தை வென்ற இந்த மாமனிதர்,
1949 ஆம் ஆண்டு திருவேல்வேலி மாவட்டம்
புலியூர் குறிச்சி என்ற கிராமத்தில் நள்ளிரவு 1
மணிக்குத் தூப்பாக்கிக் காவலர் பெரும் படையால்
சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
இவருக்குத் திருநெல்வேலி நீதிமன்றம்
ஆயுள் தண்டனையும், வெடிகுண்டு வைத்திருந்தார்
என்பதற்காக 6 ஆண்டுகளுமாக மொத்தம் 18
ஆண்டுகள் தண்டனை வழங்கியது. மக்களின்
எழுச்சி மிகுந்த போராட்டதால் பின்னர் விடுதலை
செய்யப்படடார். மொத்தம் 9 ஆண்டுகள்
சிறையிலிருந்தார்.
நமது தோழருக்கு இனிய அகவை நன்னாள்
வாழ்த்துக்கள்.
ஐயாவின் பிறந்தநாளில் அவரைப் பற்றி அறியத் தந்தீர்கள்.
ReplyDeleteதோழருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்!
ReplyDeleteதோழரை வாழ்த்துவோம்
ReplyDelete