பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday, 8 May 2013

நினைவுகள்







மறைந்த பொழுதுகளின்
மலர்ந்த நினைவுகள்.

ஆலமர நிழலின்
கோட்டோவியம் பதிவுசெய்த
வரப்பின் பக்கங்கள்.

பறவைச் சிணுங்கல்களின்
பல்லவிக்காய் காத்துக்கிடக்கும்
புன்னைமரத் தென்றல்கள்.

கையைத்தூக்கிச் சிக்கியபட்டத்தை
எடுக்க முயலுகையில்
சட்டைக் கிழிசலிலிருந்து
எட்டிப்பார்க்கும் உரோமத்தைக்
கண்டு வெட்கித்தலைகுனியும்
அரைச்சேலை அழகிகள்.

அடிக்குப் பயந்த
அகரத் தொடக்கங்கள்.

களிமண் முகங்களில்
சாதீய பயங்கள்.

மண்சுவற்றுக் கரையான்புற்றுகளில்
மறைவாய்ச் சேர்த்துவைத்த
மகளின் திருமணக்கூலிகள்.

கயிற்று ஊஞ்சல்கள்.
கூனலிலும் நிமிர்ந்த
கூரிய பார்வைகள்.

இவற்றோடு
புளியமரப் பொந்தில்
ஒளித்து வைத்த
மழைசோறு மிச்சங்களும்.

3 comments:

  1. ரசிக்க வைத்த இனிய நினைவுகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களின் வாழ்த்துக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  3. Iyalbin iruppidthile
    Idhayamennum sirappidathile
    Surantha kaviyamdhu

    Arumai!

    ReplyDelete