அமர்தல் வகுப்பறையில்
அடிக்கடி நிகழ்வதில்லை.
அலுவலும் அதிகாரமும்
மட்டுமே..
நாற்காலியில் அழகுபார்க்கிறது.
அரியணையாய் அர்த்தம்கொண்ட
ஆசிரியஅரசத்துவத்தை விட்டு
அனுபவ நாற்காலி
தள்ளியே
நிற்கிறது.
வயோதிக ஆசிரியத்தின்
வகுப்பறை நாற்காலியில்
வளமிகு கற்பித்தலின்
வாசனை முகரப்படுவதுண்டு.
அந்நியமும் அவமதிப்பும்
அருவெறுப்பும் அலட்சியமும்
வகுப்பறை நாற்காலியால்
வகுப்பறை நாற்காலியால்
விமர்சனம் செய்யப்படுவதில்லை.
நிமிர்ந்த அமர்வும்
நிலைத்த எதிர்காலமும்
மாணவ நாற்காலிகளுக்குண்டு !
கிறுக்கிய கவிதைகள்
செதுக்கிய படங்கள்
மாணவ நாற்காலிகளில்
அங்கீகரிக்கப்படாத கல்வெட்டுகளாய்
அனுமதிக்கப்படுவதுண்டு.
நிற்றலின் எதிர்ச்சொல்லாய்..
நாற்காலி நிறுத்தப்படுவதால்..
என்
வகுப்பறை நாற்காலி
மட்டும் ……
என்னை விட்டு
ஒதுங்கியே நிற்கிறது.!
அன்பு நண்ப! கவிதை அருமை.
ReplyDeleteபின்வரும் இரு வரிகளில் அனுபவ நாற்காலி வகுப்பறை நாற்காலி இரண்டின் பொருள் இன்னும் சற்று தெளிவாய் அமைத்திருக்கலாம். நன்றி.
அரியணையாய் அர்த்தம்கொண்ட
ஆசிரியஅரசத்துவத்தை விட்டு
அனுபவ நாற்காலி
தள்ளியே நிற்கிறது.
நிற்றலின் எதிர்ச்சொல்லாய்..
நாற்காலி நிறுத்தப்படுவதால்..
என்
வகுப்பறை நாற்காலி
மட்டும் ……
என்னை விட்டு
ஒதுங்கியே நிற்கிறது.!