பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday, 22 December 2014

கவிதை முகம்!


எழுத்துகளின் பயணம் !

கனத்த புருவஉயர்த்தல்களோடு
கவிதை எழுத்துகளின்
அனுமதி வாங்கினேன்..
வலைச்சரம் வாவென்று!

அதீத அக்கறையுடன்
எழுத்துகளை அலங்கரித்தேன்..

செல்லச் சிணுங்கல்களாய்
அவை அங்குமிங்குமோட,
எனக்கு
குழந்தையைத் துரத்தும்
அம்மாவாய் அடிக்கடி
மூச்சிரைத்த்து !

வெள்ளிக் கிண்ணத்தில்
தமிழ்த்தேனை வடித்தெடுத்துப்
பருகவாவென அழைத்தேன்.

தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் நின்றன,

தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் எழுந்தன

தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் பறந்தன.

தமிழ்த்தேன் இனிமை!
எழுத்துகள் பேசின.

கவிதைக்காய் ஒன்றிணைந்தன.
ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.
எழுத்துகளை அழைத்துக்கொண்டு
எங்கு செல்லலாமென
எத்தனித்த கால்கள்
சட்டென நின்றன.

மேடையொன்றின் மேன்மையில்
மலர்ந்துபோய் இலயித்தன.
எழுத்துகளோடு நானும்
விரைந்த வினாடிகள்
வியப்புக்குரியவை!

பறந்த மங்கள்யானின்
சரித்திரச் சாதனையை
பெருமையுறப் பகன்ற

சாதனை எப்பொழுதும்
சரித்திரம் எப்பொழுதும்
சாய்ந்திருப்பது எம்மிந்தியாவுடன்றோ?

மங்கள்யானும் மனிதமும்
மலர வேண்டுமென்பதன்றோ நம்மாசை?
எழுத்துகள் மகிழ்ந்தன.

மறம்பாடியது
ஆனால்,
எந்தமதத்தைப்பற்றியும்
புறம்பாடவில்லை!
ஆதலால்
தயங்காமல்சொல்வோம்
திருக்குறளே தேசியநூல்!

எக்காளமிடும் ஆனந்தக்கூக்குரல்
என்னருகே ஒலித்தது.
எழுத்துகளுடன் அங்கே
ஐக்கியமானேன்!

தஞ்சாவூரானின் வெற்றிப்பேரிகை
இலக்குவன் திருவள்ளுவனாரால்
இசைக்கப்பட்டது!

இலக்கியம் பாடப்பட்ட
இலயத்தின் இளமை!

இலக்கியம் பேசப்பட்ட
குரலின் தொன்மை !

இலக்கியம் இளைப்பாறும்
இன்நிழல் நோக்கி..
எழுத்தாய்ச் சென்றேன்.
எம்மெழுத்துகளின் கரம்
கவிதையாய் நீண்டது!

வானின்று உலகம்
வழங்கிவரும் வான்மழையை
வள்ளுவர் வாய்மொழித்தேனை
வானுலகம் உலர்த்த
வானுருவம் தேக்கிய
உரத்த சிந்தனையில்
மனம் லயித்தது.

தினமும் படித்தால்
தினமுண்டோ கலகம்?
திசைகளில் ஒளி!

புத்தகம் படிக்க
புதுநூலகம் செல்லப் பணித்தன
எம்பேரெழுத்துகள்.

நூலகம் தேடி அலைந்தோம்.
முகவரி கேட்ட அனைவரும்
உதடுமுகம்சுளித்து ஒதுங்கினர்.

புத்தக வாசனை வேண்டுமென்று
அடம்பிடித்தன என்னெழுத்துகள்!

அலைந்தேன்!
எங்கேனும் நூலகம் இருக்குமா?

சோர்ந்து வீழ்ந்தநிலையில்
தன்னுடன் வாவென்றது.

தலையாட்டினேன்.
இணையமின்நூலகங்கள்
முகவரிப்பட்டியலை அள்ளிக்கொடுத்தது,
புத்தகவாசனை புத்துலகம்திறக்கும்!

நூலகம் சென்றோம்.
எழுத்துகள் புதிதாய்ப் பிறந்தன.

பண்பாட்டுத் தளங்களில்
பயணிக்கும் நம்தடங்கள்
குறைந்துபோன கவலைப்புள்ளிகளில்
என்னெழுத்துகளின் பயணம்
கனமாய்த் தொடர்ந்தது.

தனுஷை உச்சரிக்கும்
மாணவ உதடுகளில்
என்
தேசப்பிதா அண்ணலையும்
உச்சரிக்கக் கேட்டபோது
முகவரி தொலைந்துபோன
முகக்கோணலில் கோணலானது
கரும்பலகைக் கருப்புகள் !

கனவுகளில் வாழும்
எம்மக்களைத்
தேற்றின .
குணசீலனின் தடங்கள்!

இன்னா செய்தார்க்கும்
இனியவே செய்திடுவர். 
அண்ணல் காந்தியின்
அடிச்சுவட்டைப் பற்றும்
அழகுப் பாதங்கள்
நடைபயிலும்
அற்புதத்தோட்டம் சொன்னது!

எந்தப்பக்கம் சாய்வோமென்று
என்னெழுத்துகள் குரலெழுப்ப,
தமிழின் இதயம் தேடினேன்.
கிடைத்தது?

இலக்கண அடங்கலின்
தேவைபற்றிச் சொல்லிச்சென்ற

இனிமைமகிழ்வில் இளைப்பாறின
என்னெழுத்துகள்.

இன்னும் பயணிக்க எனக்கு ஆசையெனினும்
இளைப்பாறலின் தேவைக்காக!
என்னெழுத்துகள் என்கைபிடித்து அழுத்தின,


நாளையும்  வருவோமென்ற
நிச்சய நொடிகளில்
என்னெழுத்துகளுக்கு
இரவுவணக்கம் சொன்னேன்.

அது
வலைச்சரம் முழுதும்
கேட்டது.

உங்களுக்கும் தானே?

                             இனியவாழ்த்துகளுடன்.
                                சி.குருநாதசுந்தரம்.

6 comments:

  1. தங்களின் எழுத்துக்களோடு நானும் பயணித்தேன்
    எனக்கும் இளைப்பறத்தோண்றியது அருமை சார்.

    ReplyDelete
  2. கவிதையில்
    அறிமுகங்கள்
    அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! வணக்கங்கள் வாழ்த்துக்கு !

      Delete
  3. திருக்குறள் விளக்கம் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் உண்மையான ஆலோசனைகளை எதிர் நோக்குகிறேன்.

      Delete