பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Friday, 26 December 2014

கூடுதல் முகம் - குருநாதன்.


வணக்கம். இன்று அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம் . இருப்பினும் அதில் என்னைக் கவர்ந்த சில இடுகைகளின் பால் நான் ஈர்க்கப்பட்டேன். அத்தகு வலைப்பூக்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன் அன்புடன் விளையாட்டு, அரசியல் என இரு விடயங்களைப்பற்றி எழுதி வருகிறார், இவ்வாண்டு உலகக்கால்பந்துக் கழகத்தின் பலோன் டி.ஓ. விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீர்ர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை தமது இடுகையில் கூறியிருக்கும் இவரது விளையாட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. தமிழா தமிழா தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல்களை வெளியிட்டு அதற்கான பொருளையும் கூறியுள்ள பாங்கு போற்றத்தக்கது. பக்குடுகை நன்கணியாரின் உலக வீடுபேறு அடையும் வழி பற்றி ஏங்கும் பாடலைப் பதிவு செய்த பதிவர் அதைக் கண்ணதாசனோடு ஒப்பிட்டமை சிறப்பு. மணிஜி தான் சந்தித்த பெண் ஓட்டுநரிடமிருந்து சில அனுபவங்களைப் பெறும் மனிஜியின் ஆகாயத்தாமரை மிகச் சிறப்பு, அதிலும் தன் பெயரும் அவளின் கணவனின் பெயரும் ஒன்றாகவே இருந்த இணையின் வியப்பிலிருந்து மீள்வதற்குள் அனுபவம் முடிந்து விடுகிறது. பெண்களின் வலி ? மண் மரம் மழை மனிதன் பாசுமதி அரிசி, மேல்தட்டு மக்களுக்கான உணவின் ருசி. ஆனாலும் அதன் தாவரவியல் அறிவினைத் தந்திருக்கும் இவ்வலைப்பூ என்னைக் கவர்ந்தது, காரணம், இதன் தலைப்பை மீண்டும் ஒருமுறை பாருங்களேன். இன்னும் நிறைய மூலிகைகளை நீங்கள் இங்கு முகரலாம். TamilFuser இருசக்கர வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் தருணங்களில் அரசியலை நான் நினைப்பதுண்டு, அந்த அரசியல் அன்று மட்டும் பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த எரிபொருள் அரசியல் பற்றி ஆழமாகப் பதிவிட்டிருக்கும் சதுக்க பூதம் என்னைக் கவர்ந்து விட்டார். பெட்ரோல் அரசியல் உங்களுக்கும் பிடிக்கும்.

1 comment:

  1. கூடுதல் முகத்தில் சிறப்பான அறிமுகங்கள்...

    ReplyDelete