பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Sunday 20 December 2015

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – சி.குருநாதசுந்தரம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – சி.குருநாதசுந்தரம்.




         

                     தமிழாசிரியர் கழகம் நடத்திய முப்பெரும் விழாவின் நினைவுகளை மாவட்டத்தலைவர் வீட்டில் கடந்த வாரத்தின் ஒரு பின்னாளில் பேசிக்கொண்டிருந்தோம். சிறப்பாக நடந்தேறிய அந்நிகழ்வைப் போல் இவ்வாண்டும் நடத்த வேண்டுமென அனைவரும் முன்மொழிந்தனர். வீட்டிற்கு வந்தேன். கடந்த விழாவில் சென்னை கிறித்துவக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சொல்லறிஞர் ஐயா அரசேந்திரனின் அழகுப்பொழிவையும்,, தொடக்கவுரை நிகழ்த்திய ஐயா முத்து நிலவன் அவர்களின் பொழிவையும் என் நாள்குறிப்பேட்டில் குறிப்புகளாக சேகரித்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அவையனைத்தையும் ஒரு கட்டுரையாக தொகுத்து என் வலைப்பூவில் பதிவிட வேண்டுமென்றும் நினைத்திருந்தேன்.  சான்றோர் பொழிவைப் பதிவு செய்வதும் நம் தலையாய கடமையாகுமன்றோ? அவர்களின் பொழிவினைத் தொகுத்துள்ளேன். அது தமிழாசிரியப் பெருமக்களுக்குப் பெரிதும் உதவும் என்பது திண்ணம்.
ஐயா அரசேந்திரன் அவர்களின் சொல்லாட்சியில் சில :

தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் .
உலக க் கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக  நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த சில ஆங்கிலச்சொற்களை பேராசிரியர்  பட்டியலிட்டார் . வியப்பின் உச்சிக்கே சென்றோமென்றால் அது மிகையன்று.

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..

உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

" பொத்தல் " இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .

2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )

- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

" " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .




தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .

தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் .
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரைஎன்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறுஎன்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.




தமிழ் எழுத்து பிறந்த கதை  பற்றிக்கூறிய ஐயா முத்துநிலவன் அவர்களின் பொழிவின் துளிகள் :
, , , , , , , , , , , ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத்
தொடாமலும் காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகள்  உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர்,
ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத்
தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின்
பங்கைவிட உடலின் பங்கு அதிகம்
என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள்
என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

, , , , , - ஆறும் வல்லினம்.
, , , , , - ஆறும்
மெல்லினம்.
, , , , , - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில்
பயன்படுத்திய உயிர் ஒலிகள்
(படர்க்கை), (தன்னிலை),
(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில் ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை*த்
தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ்
என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின்
முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
+ கூடி '' வாகவும், ம்+
கூடி 'மி' யாகவும், ழ்+ கூடி "ழு"
வாகவும் என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத்
நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.

இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

என் நினைவில் பாரதிதாசனின் வரிகள் மீளுருவாயின.
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

கட்டுரை எழுதத் தூண்டிய ஐயா திருப்பதிக்கு நன்றி. 

5 comments:

  1. அம்மா, அப்பா என்ற சொல் 200 மொழிகளில் உள்ளதா
    வியப்பாக இருக்கிறது நண்பரே
    பெருமையாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா. இது பேராசிரியர் அரசேந்திரனின் சொல்லாட்சியில் ஒன்று. அவர் கவனிக்கப்பட வேண்டிய தமிழறிஞர். மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. தகவல்கள் வியக்க வைக்கிறது! தமிழின் பெருமையை உணர முடிகிறது! பொக்கிஷமான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்லது குரு. மிகவும் அருமையான பதிவு. எழுதத் தூண்டிய நண்பர் திருப்பதிக்கு நன்றியும், உங்களுக்கு வணக்கம் கலந்த பாராட்டும். எனது கூகுள் பெருக்கியில் பகிர்கிறேன். நன்றி.

    ReplyDelete
  4. அருமையான மிக மிகத் தேவையான பதிவு..நன்று...நன்று..நன்று..வாழ்த்துக்கள் திரு குருநாதசுந்தரம் அய்யா அவர்களே

    ReplyDelete