பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Monday 14 January 2013

நானும் வருகைப்பதிவேடும்.


வளமைத் தொடக்கத்திற்காக
வாசிக்கப்படும் முன்னுரை.

என் அங்கீகரிப்பைவிட
இதன் அங்கீகரிப்பு
முக்கியமானது.

மாணவ நிகழ்வுகளை
மேன்மையாக்கும்
மனுநீதி இதற்குண்டு.

பயமின்றித் தொடர்புறும்
தருணம்
இப்பதிவேடு திறக்கப்படும்போது
மட்டுமே
எனக்குக் கிட்டும்.

நான்
வடிக்கப்போகும் சிற்பங்களின்
வரலாற்றுச் செப்பேடு
இது மட்டும்தான்.

மாணவ ஒழுக்கத்தின்
அளவுகோலாக மதிக்கப்படும்
தடங்களுள் இதுவும்ஒன்று.

வறுமையும் வாய்க்கொழுப்பும்
வசதியும் வாய்ப்புகளும்
ஒருமுகமாய்க் காட்டிடும்
மாணவக் கண்ணாடி..

இதன் பக்கங்கள்
கிழிவதையும் அழிவதையும்
நான்
என்றென்றும் விரும்பியதில்லை.

தலையெழுத்தை அழிப்பதற்கு
யார் தான் விரும்புவார்கள் ?

2 comments:

  1. நான் வடிக்கப்போகும் சிற்பங்களின் வரலாற்றுச்செப்பே இது மட்டும் தான், ஆஹா அருமையான வரிகள். இதே போல மெல்லக் கற்போரும் நானும் எனும் தலைப்பில் எழுதுங்களேன். நன்றியுடன் காரையூர் கோபிநாத்

    ReplyDelete
  2. ஐயா புதுக்கோட்டை தமிழ்க் கட்டகம் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

    ReplyDelete