பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Saturday 27 December 2014


ஆளுமைகளின் வலைப்பூக்கள் ஆளுமைகளின் வலைப்பூக்கள் : வணக்கம். இன்று ஏழாம் நாள். என்னுடன் பயணித்த வலைச்சரத்திற்கு மிக்க நன்றி. புதுக்கோட்டை கணினிப் பயிலரங்கம் சார்ந்த செய்திகளை முன்னொரு இடுகையில் கூறியிருந்தேன். நாங்கள் வலைப்பூவில் இவ்வளவு அளவளாவக் காரணம் எங்களுக்குக் கருத்தாளர்களாக வந்த வலைப்பூ ஆளுமைகள் எனலா. இவ்விறுதி நாளில் அவர்களை அறிமுகப்படுத்துவது உங்களுக்குப் புதிதில்லை எனினும் நன்றியின் மேல் எங்களுக்கு என்றுமே மிகுந்த மதிப்புண்டாகையால் அவர்களின் பெருநகர்வுகளைப் பற்றி அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன். எட்வின் மாற்றுச்சிந்தனை முகம். மனிதர்களை நேசிக்கத்தெரிந்த கலை. வாசிக்கத் தெரிந்த கண்கள். இவரின் வரிகளில் தெரியும் இயல்பும் யாருக்கும் புலப்படாத இன்னும் கொஞ்சமும். வேலையில்லை மொடாக்குடியன் கஞ்சா உறிஞ்சி பொறுக்கி எல்லாம் சரி யாரிடம் இல்லை சரியாயிடும் பையன் நல்லவனா சொல்லுங்க? வாழ்வியல்பின் யதார்த்தங்கள் திரு. எட்வினுக்கே வந்த கலை. http://www.eraaedwin.com/ கரந்தை ஜெயக்குமார் என்னுடைய வலைப்பூவின் ஒரே வாசிப்பாளர் இவர் மட்டும் தான். ஒரு கணித ஆசிரியராக இருக்கும் இவரின் தமிழறிவு காணவியலாதவை. இவரின் வலைப்பூ சார்ந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன். எழுத்தின் வல்லமை இவரிடம் இயல்பாய் அமைந்திருப்பது இவருக்குக் கிடைத்த பெரும் வலிமை. இவர் எனக்கு முன்னெழுத்து. இராமநாதபுரம் சீமையும், சிவகங்கைச் சீமையும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை, வேதனைகளைத் தாங்கள் அறிவீர்கள். எனது கணவரை வஞ்சகமாக, வெள்ளையர்கள், மறைந்திருந்து கொன்றதையும் தாங்கள் அறிவீர்கள். என்னைப் பற்றித் தாங்கள் அறிந்ததை விட, தங்களைப் பற்றி அதிகமாகவே நான் அறிவேன். வேலு நாச்சியார் பற்றீ இவர் எழுதி வரும் பதிவு மிக்க சுவையாய் உள்ளது. ஒரு ஆசிரியனாய் இவரின் கருத்துகளை வகுப்பறையில் ஆழ்வதுண்டு. http://karanthaijayakumar.blogspot.com/2014/12/5.html#more திண்டுக்கல் தனபாலன் . வலைப்பூச் சித்தர். இது நாங்கள் வைத்த புனைப்பெயர். பேருந்து நிலையத்திலிருந்து நான் தான் இவரை பயிலரங்கக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பெருமை எனக்குக் கிட்டியது, ( ஐயா நிலவனுக்கு நன்றி ) பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டோம். இவரின் வகுப்பை முழுமையாகக் கவனிக்க இயலவில்லை. என் வலைப்பூவைச் செப்பனிட இவரைத் தான் அழைத்துள்ளேன். அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - அறிவுடைமை - 421 - இக்குறள்பாவிற்கு டிடி தரும் அறிவின் செய்தி வியக்க வைக்கிறது. http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html#more முனைவர் ஜம்புலிங்கம் மிகப்பெரிய எழுத்தாளுமை கொண்டவராக இருந்தாலும் துளிக்கூட அறிவின் கர்வம் இவரிடம் இருந்ததில்லை. முனைவர். அருள்முருகன் ஐயா அவர்களின் ஆய்வறிமுகத்தில் இவரின் எதிர்வினை கண்டு புருவம் உயர்த்தியதுண்டு. மிகவும் எளிமையானவர். எழுத்திலும் கூட ஆழமானவர். துளிர்விடும் விதைகள் பற்றிய இவரின் அறிமுகவெழுத்துகள் அருமை. http://drbjambulingam.blogspot.com/ டி.என்.முரளீதரன் ஒரு கல்வி அதிகாரி இலக்கியத் தளங்களில் இயங்குவது மிக அரிதானது. ஏனெனில் இது நெருக்கடிகளின் நொடிகள் அதற்கெல்லாம் விதி விலக்காக சிலர் இலக்கியத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை ( எங்கள் புதுகை மு.க.அ.போல் ) இவரின் எழுத்தாழம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது. வைரமுத்துவின் வரிகளை அவர் எடுத்துக்கூறி அதில் உடன்பாடிலா வரிகள் காணுமாறு அழைத்திருந்தமை அருமை. இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின் எடைகாட்டி இன்பம் இழைப்பாள்-மடையா கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை விலைமகள் ஆசை விடு ஐயா , எனை உறுத்திய வரிகள் இதுவென எண்ணுகிறேன். http://www.tnmurali.com/2014/12/aids-awareness-vairamuthu-kavithai.html தமிழிளங்கோ ஒரு வங்கி அதிகாரி இவ்வளவு தமிழாளுமை கொண்டு இயங்குவது உயர்விலும் உயர்வு. இவரின் ஒளியோவியங்கள் என்னை மிகவும் ஈர்த்த்து. கணக்கிலாக் கணக்குகள் பற்றிய அவரின் பதிவு விழிப்புணர்வின் நிழல். மிக்க நன்றி ஐயா. http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_19.html sumazla இதையும் சற்று நேரம் கிடைத்தால் பாருங்கள். ஒரு பெண் பதிவரின் மிகச்சிறந்த வலைப்பூ. இவர் எழுதிய வலைப்பூ பற்றிய புத்தகமே என்வ் வலைப்பூவிற்கான விதை. நல்ல வலைப்பூக்களூல் இதுவும் ஒன்று. http://sumazla.blogspot.com/ அன்புடன், சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி )

10 comments:

  1. நல்ல்சிறப்பான அறிமுகங்கள் வித்தியாசமா இருக்கே சார்...மகிழ்ச்சி ..வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா. தங்களின் வருகை எனக்கு மிகவும் நல்லூட்டமாக உள்ளது. மிக்க நன்றி.

      Delete
  2. அருமை நண்பரே
    தொடருங்கள்
    தங்களை வாசிக்கப் பலர் காத்திருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. என் பூவிற்கு தொடர்ந்து வடும் தேனி நீங்கள். தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. மிக்க மிக்க நன்றி ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. தங்களின் பின்னூட்டம் எனக்குப் பேரூக்கமாக உள்ளது.

      Delete
  4. ஆளுமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. வலைச்சரத்திற்கு மிக்க நன்றி. தங்களின் நட்பு ஏற்படுத்திக்கொடுத்தமைக்காய் வலைச்சரத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  5. ஊமைக்கனவுகள் வழியே உங்கள் தளம் வந்தேன்...

    இனி தொடருவோம் !

    சிறப்பான அறிமுகங்கள் ! அனைவருக்கும் வாழ்த்துகள் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr


    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா. கட்டாயம் வருகிறேன். வருகை தந்தமைக்கு வாழ்த்துகள்.

      Delete