பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Thursday, 20 December 2012

நானும், மாணவனும்.


மணக்கும் மலர்த்தாள்கள்,
மலர்வதற்கான பயிற்சியில்,
வகுப்பறைத் தோட்டத்தில்
அழகாய் அமர்ந்திருக்கிறது,
அடுத்த தலைமுறை.


சுழன்றடித்த கனத்த
பிரம்படித் தழும்பும்,
முட்டிகள் சிதைந்த
முழங்கால் தண்டனையும்
சிதைந்த ஊடுருவலாய்
அந்நியப்பட்டு நிற்கின்றன.


என் மாணவன்
 ஒரு கவிதை.


எண்ணெய்வழியும் முகங்களை
நல்லெண்ணங்களால் அழகுபடுத்தும்
சமூகச் சாத்தியமே
கவிதைக் கரு.


தாயின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்
கவிதையின் நிறுத்தற்குறிகள்.


சிரிப்பும் சிந்தனையுமே
கவிதைக்கு முற்றுப்புள்ளி.


பேசும் உரிமையும்
பேசும் உணர்வும்
அளவிலாச் சுதந்திரத்துடன்
கவிதையில் உலாவரும்.


வளர்ந்த கவிதை
வானளாவப் பேசப்படும்வரை
வகுப்பறைத் தோட்டம்
மறுஉழவு
செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும்.  

3 comments:

 1. உழவரே.
  தங்கள் “செய்யுள்“ நன்றாகவே இருக்கிறது.
  தொடரட்டும் தங்கள் “உழவாரப“ பணி!
  அன்புத் தோழன்.
  நா.முத்து நிலவன்

  ReplyDelete
 2. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வாழ்த்துகள்.நட்புடன் சு.துரைக்குமரன்

  ReplyDelete
 3. வணக்கம்
  குருநாத சுந்தரம்(சார்)


  உங்களின் பக்கம் வருவது இதுதான் முதல் தடவை கவிதைகள் நல்ல கருத்து மிக்க உள்ளது வாழ்த்துக்கள்
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் நேரம் கிடைக்கும்போதும் மின்சாரம் உள்ளபோதும் நம்ம பக்கமும் வாருங்கள்
  13,01,2013 இன்று வலைச்சரத்தில் அறிமகமாகிஉள்ளது,பார்க்கhttp://blogintamil.blogspot.com
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete