பரவலான பாரதித் தடத்தின் குறும்பயணி

Wednesday 26 December 2012

புத்தாண்டே வா..
காவிரி ஆற்றினைக்
கையோடு கூட்டிவா.
நெற்கதிரோடு நானும்
நிறையப் பேசவேண்டும்.

மின்சாரத்தை கைநிறையத்
தேக்கி வா.,என்
மாணவனோடு நானும்
தேர்வுக்குப் படிக்கவேண்டும்.

எம்தோழிகளின் உண்மையான
உணர்வுகளை மதிக்கும்
மனிதர்களைக் கூட்டிவா.
சமூகத்தோடு நானும்
சமத்துவம் காணவேண்டும்.

புத்தாண்டே வா.
பெருமிதத்தோடு உன்னைப்
புதுநொடியில் வரவேற்கிறேன்.

1 comment:

  1. உங்களின் பரந்த சிந்தனை போல புது வருடமும் பரந்து விரியட்டும்
    தோழமையுடன்

    ReplyDelete