எனது
இனிய நண்பர் திருவாரூர் தோழர் திரு . இரா.பண்டியன் அவர்களின் இனிய மணவிழா அண்மையில்
நடைபெற்றது. அவர் ஒரு கணித ஆசிரியர் என்பதால் வாழ்த்துக் கவிதையில் கணிதம் கட்டாயம்
இடம் பெற வேண்டுமென்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று இக்கவிதையை எழுதினேன்.
ஒரு கவிதைச் சமன்பாடு இதோ :
இரா.பாண்டியன்,
ச. சங்கீதா இல்லறப்பள்ளி.
பாண்டியனையும்,சங்கீதாவையும்
கூட்டினேன்
….!
அகநானூறு கிடைத்தது.
பாண்டியனைச்
சங்கீதாவிலிருந்து
கழித்தேன் …!
புறநானூறு கிடைத்தது.
பாண்டியனைச்
சங்கீதாவால்
பெருக்கினேன்
…!
கம்பராமாயணம் கிடைத்தது.
பாண்டியனைச்
சங்கீதாவால்
வகுத்தேன்
…!
திருக்குறள் கிடைத்தது …!
இல்லறச்
சமன்பாட்டில்
இருவரையும்
பொருத்திப்பார்த்ததில்
சரியாகப்
பொருந்தியது.
2
[ பாண்டியன்
+ சங்கீதா ] =
2
2
[ அறம் ] + [ அன்பு
] +
2 பாண்டிய [ இளவரசிகளும்,இளவரசர்களும்
]
|
இல்லறப் பள்ளிக்கான
எனது மதிப்பெண்
நூற்றுக்கு
நூறு .
No comments:
Post a Comment